https://youtu.be/D-XRbtdZBTg

 

சுயநலம். விவேகானந்தரின்அமுதவாக்கு.எஸ்.வி.ரமணி.

விவேகானந்தரின் அமுத வாக்ககை கேட்டு,அதை கடை பிடித்து வாழ்க்கையில் பல நலன்களையும் பெறுங்கள்.நன்றி,,வணக்கம்.

Advertisements

https://youtu.be/bXMwPlwaRIU

வள்ளலார் வாக்கு . ௨. எஸ்.வி.ரமணி.

 அழியக்கூடியது உலக இன்பம் அதில் ஆசை வைக்காதே. வள்ளலார் வாக்கு. எஸ்.வி.ரமணி.

 வள்ளலார் வாக்கை கேளுங்கள்.வாழ்க்கையில் நிம்மதியும் இன்பமும் பெறுங்கள். நன்றி,வணக்கம்.

https://youtu.be/_iowFtUdrlg

வள்ளலார் வாக்கும், இறை வழிபாடும். எஸ்.வி.ரமணி.

 ஒவ்வொரு நாளும் இறைவனை வணங்கி வழி படுங்கள்.இறைவன்  இல்லாத இடமே இல்லை. வள்ளலார் வாக்கை தொடர்ந்து கேளுங்கள். நன்றி,வணக்கம்.

https://youtu.be/v-A9rhlc9gY

திருநீலகண்ட நாயனாரின் பெருமை. எஸ்.வீ.ரமணி.

 மண்பாண்டங்கள் செய்யும் குயவனார்,திரு நீல கண்ட நாயனாரின் பெருமையை சிவபெருமான் உலகிற்கு உணர்த்திய பெருமையைப் பற்றி சிறிது கேளுங்கள். ஓம் நமசிவாயா!

நன்றி,வணக்கம்.

 

பாஜக தலைவர் மோடி ஜெயலலிதா உருவப்படத்தினை திறந்துவைப்பாரா?எஸ்.வி.ரமணி.

தமிழக சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் ஜீலை 17-ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதா படத்தை திறந்துவைக்க வருமாறு பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நேற்று மாலை டெல்லி பயணமானார். அவர் இன்று காலை 11.30 மணி அளவில் பிரதமர் இல்லத்தில் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது. இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருடனான சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை என தெரிவித்தார். மேலும் தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறந்து வைக்க பிரதமருக்கு அழைப்பு விடுத்ததாகவும், எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாடுவதால் அதிலும் பங்கேற்குமாறு பிரதமருக்கு கோரிக்கை விடுத்ததாக கூறினார்.

இந்நிலையில் சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறந்து வைக்க வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். பழனிசாமி மோடிக்கு எழுதிய கடிதத்தில், சட்டசபையில் ஜெயலலிதா உருவப்படம் திறப்பு விழா வருகிற ஜீலை 17-ஆம் தேதி நடைபெறவிருப்பதாகவும், இவ்விழாவில் பங்கேற்று ஜெயலலிதா உருவப்படத்தினை திறந்து வைக்குமாறும் அக்கடிதத்தில் கூறியுள்ளார். மேலும் அக்கடிதத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு, அரசு விழாவாக கொண்டாடவிருப்பதாகவும் அவ்விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டுமென்று பழனிசாமி கூறியுள்ளார்..

ஏற்கனவே சென்னையில் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைக்க மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு வந்து கோட்டையில் ஆலோசனை நடத்தி சென்றார். தற்போது மோடியும் கோட்டைக்குள் நுழைய போகிறார். ஜெ படத்தை திறந்து வைக்க மோடியை அழைத்திருப்பதன் மூலம் அதிமுக அம்மா அணி எப்போதும் டெல்லிக்கு முன்னுரிமை அளிக்கும் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கிறார் பழனிசாமி. பழனிசாமியின் இந்த திடீர் நடவடிக்கையால் டெல்லி தரப்பு பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துவிடுமோ என்ற பதற்றத்தில் பன்னீர் தரப்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதனால் விரைவில் ஒரு விழா ஏற்பாடு செய்து பன்னீர் தரப்பிலிருந்தும் மோடிக்கு அழைப்பு செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பன்னீர் அணியினர் பாஜகவோடு நெருக்கம் காட்டும் நிலையில் அதில் உடைப்பை ஏற்படுத்த அதிமுகவை மோடியின் நம்பிக்கைக்குரிய கட்சியாக இணைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.  பாஜகவால் சொந்த பலத்தில்  வெல்ல முடியாத நிலையில் அதிமுக தயவில் வருகிற உள்ளாட்சி தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் கணிசமான தொகுதிகளை வெல்ல முடியும் என்பது பாஜகவின் கணக்கு!

யார் கணக்கு வெல்லப்போவது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நன்றி,வணக்கம்.

 

வாஜ்பாயின் தலைமையை ஏற்று திமுகவும்,பாஜகவும் கூட்டணி வைத்தபோது  ஒபிஎஸ்ஸை எதிர்ப்பது  ஏன்?எஸ்.வி.ரமணி.

விரைவில் தமிழக சட்டசபை தேர்தல்  தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல்….ஓ.பி.எஸ்.,சூசக பேச்சு! சென்னை: சட்டசபைக்கு தேர்தல் வர வாய்ப்புள்ளது என ஒ.பன்னீர்செல்வம் கூறினார். ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கேட்டு ஓ.பி.எஸ். தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.முதல்கட்டமாக காஞ்சிபுரம் ஓ.எம்.ஆர் சாலை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில்நேற்று  பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் மதுசூதனன் பொன்னையன், கே.பிமுனுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் பன்னீர் பேசுகையில், ‘‘ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும். ஒரு குடும்பத்தின் கையில் கட்சியும், ஆட்சியும் செல்லக்கூடாது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக சட்டசபை தேர்தல் வர வாய்ப்புள்ளது’’ என்றார்.

தமிழகத்தில் இருக்கும் அதிமுகவின் ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும்,  என்று பாஜக தலைவர் தமிழிசை சூசகமாக தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு இது போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கினால் தான் குற்றங்கள் குறையும்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி மிக பலவீனமாக இருக்கிறது. அவர்களின் நிர்வாக திறமையின்மையால் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்.

தமிழகம் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறது. மீண்டும் ஆண்டுகொண்டிருக்கும் கட்சியும், ஆண்ட கட்சியும் வரக்கூடாது என்று மக்கள் விரும்புகிறார்கள்.

தற்போது உள்ள சூழலில் மக்கள் விரும்பும் மாற்றத்தை பாஜகவால் மட்டுமே தர முடியும். பாஜகவை வலுப்படுத்தும் திட்டத்துடன் தலைவர் அமித்ஷா வரும் 11-ந்தேதி தமிழகத்திற்கு வர உள்ளார். இவ்வாறு கூறினார்.

வாஜ்பாயின் தலைமையை ஏற்று திமுகவும்,பாஜகவும் கூட்டணி வைத்தபோது எதிர்க்காதவர்கள்,இப்போது ஓபிஸ் கூறுவதை மறுத்து பேசுவது ஏன்? நன்றி,வணக்கம்.

டி.டி.வி.தினகரன் வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் இருக்க  போலீஸ் நடவடிக்கை எஸ்.வி.ரமணி.

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்ச பேரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள டி.டி.வி.தினகரன் வெளிநாட்டுக்கு தப்பி விடாமல் இருக்க போலீஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. விமான நிலையங்களை உஷார் படுத்தி உள்ளது.

 விசாரணை முடிவடையாத நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வந்ததால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியது. மேலும், இரு அணியினரும் அ.தி.மு.க. கட்சியின் பெயரை பயன்படுத்த தடை விதித்தது. சசிகலா அணி அ.தி.மு.க. அம்மா என்றும், ஓ.பன்னீர்செல்வம் அணி, அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா என்றும் அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

 இந்த நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

 இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க. அம்மா அணிக்கு பெறுவதற்காக அதன் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ரகசிய பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக உளவாளி ஒருவர் மூலம் டெல்லி குற்றப்பிரிவு போலீசாருக்கு தெரிய வந்தது.

 இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டவர் சுகேஷ் சந்திரசேகர் (வயது 27) என அறிந்து, அவரை கடந்த 17-ந் தேதி அதிகாலை டெல்லி ஹயாத் ரீஜென்சி நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தபோது, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்ததாகவும், அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சம் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

 தேர்தல் கமிஷனுக்கே லஞ்சம் அளிக்க பேரம் நடந்திருப்பது, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 சுகேஷ் சந்திரசேகரிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் டி.டி.வி.தினகரனிடம், “தேர்தல் கமிஷனில் உள்ளவர்களிடம் எனக்கு நல்ல தொடர்பு இருக்கிறது. அவர்களது உதவியுடன் உங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருகிறேன்; அதற்கு ரூ.50 கோடி தரவேண்டும்என கேட்டதும், ரூ.10 கோடி முன்தொகையாக தரப்பட்டுள்ளதும் தெரிய வந்தது.

 

இந்த முன்தொகை, டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் உள்ள ஹவாலா புள்ளிகள் (சட்டவிரோத பண பரிமாற்றாளர்கள்) மூலம் சுகேஷ் சந்திரசேகரிடம் தரப்பட்டதும் அம்பலத்துக்கு வந்தது.

 இதையடுத்து அவரை டெல்லி சாந்தினி சவுக் பகுதிக்கு குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் அழைத்துச்சென்று, டி.டி.வி.தினகரனிடம் இருந்து தனக்கு ரூ.10 கோடி பெற்றுத்தந்த ஹவாலா புள்ளிகள் யார், யார் என அடையாளம் கூறுமாறு கேட்டதாகவும், அவர் காட்டியதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அவரை சென்னை அழைத்து வந்தும் விசாரணை நடத்த டெல்லி குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

 இந்த சம்பவத்தை தொடர்ந்து கட்சியில் டி.டி.வி.தினகரனின் பிடி தளர்ந்தது. இத்தனை நாட்களும் அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த முன்னணி தலைவர்கள், அமைச்சர்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். அவரையும், சசிகலாவையும் கட்சியில் இருந்து அப்புறப்படுத்தி விட்டு, ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் சமரசம் பேசி, இணைந்து இரட்டை இலை சின்னத்தை முறைப்படி பெறுவதற்கான நடவடிக்கையில் அவர்கள் இறங்கி உள்ளனர்.

 இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதில் ரகசிய பேரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் விவகாரத்தில் டி.டி.வி.தினகரன் மீதான டெல்லி போலீஸ் பிடி இறுகியது.

 ஆனால் அவர் நாட்டை விட்டு தப்பி விடலாம் என டெல்லி குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன. உடனே அவர்கள் அதிரடியாக டி.டி.வி.தினகரன் வெளிநாடுகளுக்கு தப்பி விடாதபடிக்கு, அவரை தேடப்படும் நபராக அறிவித்து, விமான நிலையங்களில் உள்ள குடியேற்ற அதிகாரிகளை உஷார்படுத்தி லுக் அவுட் நோட்டீஸ்வெளியிட்டுள்ளனர்.

இதை உறுதி செய்த டெல்லி இணை போலீஸ் கமிஷனர் (குற்றப்பிரிவு) பிரவீர் ரஞ்சன், இது தொடர்பாக கூறும்போது, “இது ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கைஎன்று கூறினார். தினகரனுக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது? நன்றி,வணக்கம்.

 

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார்களா?எஸ்.வி.ரமணி.

 பத்திரிகை செய்திகள்.

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி. தினகரன் மீது வழக்கு பதிவு செய்துள்ள டெல்லி போலீசார், அவரிடம் விசாரணை நடத்துவதற் காக சென்னை வந்து உள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது இரு அணியினரும் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரியதால், அந்த சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியது.

இந்த நிலையில், வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி வரை பண பட்டுவாடா நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் கமிஷன் ரத்து செய்தது.

இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருவதாக கூறி பேரம் பேசியதாக, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் (வயது 27) என்பவரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர். தெற்கு டெல்லி பகுதியில் உள்ள ஹயாத் ரீஜென்சி என்ற நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த சுகேஷ் சந்திரசேகர் நேற்று அதிகாலை 3 மணிக்கு கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சம் ரொக்க பணமும், விலை உயர்ந்த இரு சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான சுகேஷ் சந்திரசேகர் பெங்களூரைச் சேர்ந்தவர் ஆவார்.

அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் தினகரனுக்கும், சுகேஷ் சந்திரசேகருக்கும் இடையே நடைபெற்ற செல்போன் உரையாடலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் சாணக்கியபுரி பகுதியில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் துணை போலீஸ் கமிஷனர் சஞ்சய் ஷெராவத் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தேர்தல் கமிஷன் அதிகாரிகளுடன் சுகேஷ் சந்திரசேகருக்கு உள்ள தொடர்பு குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர் மாலை தீஸ் ஹசாரி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக சுகேஷ் சந்திரசேகரை போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு போய்ச் சேருவதற்குள் கோர்ட்டு பணி நேரம் முடிந்துவிட்டது.

இதைத்தொடர்ந்து போலீசார் சுகேஷ் சந்திரசேகரை கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி பூனம் சவுத்ரி வீட்டுக்கு அழைத்துச் சென்று, அவரது முன்பு ஆஜர்படுத்தினார்கள்.

அவர், சுகேஷ் சந்திரசேகரை 8 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, போலீசார் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

இது குறித்து டெல்லி துணை போலீஸ் கமிஷனர் மதுர் வர்மா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டெல்லி போலீஸ் குற்றப்பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் இன்று (நேற்று) அதிகாலை கைது செய்யப்பட்டு உள்ளார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக இவர் தேர்தல் கமிஷன் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க. (அம்மா) அணிக்கு பெற்று தருவதாக டி.டி.வி.தினகரனிடம் கூறி இருக்கிறார்.

இதற்காக ரூ.50 கோடி பேரம் பேசி முடிவு செய்யப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சம் ரொக்கமாக கைப்பற்றப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக டி.டி.வி.தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டப்பிரிவு 8 (அரசு ஊழியரை சரிக்கட்டும் வகையில் சட்டவிரோதமாகவும், ஊழல் வழியிலும் லஞ்ச பணம் பெறுவது), இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 170 (அரசு ஊழியராக தன்னை காட்டிக்கொண்டு மோசடி செய்தல்) மற்றும் 120பி (கிரிமினல் சதியில் ஈடுபடுதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. டி.டி.வி.தினகரனுடன் சுகேஷ் சந்திரசேகருக்கு உள்ள தொடர்பு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டி.டி.வி.தினகரனுக்கு எதிரான சம்மனை எடுத்துக்கொண்டு டெல்லி துணை போலீஸ் கமிஷனர் சஞ்சய் ஷெராவத் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை வருகின்றார். இது தொடர்பாக டெல்லியில் இருந்து நேற்று இரவு 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சென்னை வந்தனர்.

விசாரணைக்காக டி.டி.வி. தினகரன் டெல்லி போலீசாரால் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. 

டி.டி.வி.தினகரனுக்கு ஏன் இந்த வீண் வேலை?நன்றி,வணக்கம்.

 

ஹே விளம்பி தமிழ் புத்தாண்டில் எல்லா ராசிக்காரர்களும்,தங்கள் இன்னல்கள் நீங்கி நலம் பெற வேத விநாயகன் அருள் புரியட்டும்.

வருமான வரித்துறை அதிகாரிகளை அமைச்சர்கள் மிரட்டலாமா? எஸ்.வி.ரமணி..

பத்திரிகை செய்திகள்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 35 இடங்களில் கடந்த 7–ந் தேதி அன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த அதிரடி சோதனை சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் வீடு, முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் வீடு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் கீதாலட்சுமியின் வீடு ஆகிய இடங்களிலும் அப்போது சோதனை நடந்தது. 8–ந் தேதி அன்றும் இந்த சோதனை நீடித்தது.

சோதனை அடிப்படையில், அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரை வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.6 கோடி ரொக்கப்பணமும், பல முக்கியமான ஆவணங்களும் சிக்கியதாக தெரிய வந்துள்ளது. மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பணம் கொடுத்ததற்கான ஆவணமும் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அமைச்சர் மீது வருமானவரித்துறை சார்பில் போலீசில் புகார் அளிக்கப்படும் என்று ஏற்கனவே வருமான வரித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், நேற்று பகல் 12 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் புகார் மனு அடங்கிய கவர் ஒன்றை, சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு சென்றார். கமி‌ஷனரின் நேர்முக உதவியாளர் புகார் மனு அடங்கிய கவரை பெற்று, போலீஸ் கமி‌ஷனர் கரன் சின்காவிடம் கொடுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த புகார் மனுவில், ‘அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்தபோது, பெண் அதிகாரி உள்பட வருமானவரித்துறை அதிகாரிகள் மிரட்டப்பட்டதாகவும், வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களை அழித்ததாகவும், அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாகவும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சரத்குமார் வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வருமானவரித்துறை சார்பில் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், இந்த புகார் மனுக்கள் பெறப்பட்டதை கமி‌ஷனர் அலுவலக உயர் அதிகாரிகள் யாரும் உறுதிசெய்யவில்லை. போலீஸ் கமி‌ஷனர் கரன் சின்காவை செல்போனில் தொடர்பு கொண்டபோது, ‘அவரும் போனை எடுத்து பேசவில்லை’. ஒரு சில நிருபர்களிடம் போனை எடுத்து பேசிய கமி‌ஷனர் கரன் சின்கா, அமைச்சர்கள் மீது கொடுத்த புகார் மனு பற்றி பதில் எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால், புகார் மனு கொடுக்கப்பட்டதை வருமான வரித்துறை வட்டாரத்தில் உறுதி செய்யப்பட்டது.

3 அமைச்சர்கள் மீதான இந்த புகார் மனு மீது சென்னை நகர போலீசார் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பது பற்றி இனிமேல் தான் தெரிய வரும்.

கையில் அதிகார பலம் உள்ளது என்பதற்காக அமைச்சர்கள்,வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்டலாமா?காலம் பதில் சொல்லும். நன்றி,வணக்கம்.

Older Posts »

Categories