Posted by: ramrajya | August 2, 2014

“Self Respect Leader Narendira Modi” Review by S.V.Ramani in “Engal Bharatham” Tamil Magazine April 2005.

“Self Respect Leader Narendira Modi” Review by S.V.Ramani in

“Engal Bharatham” Tamil Magazine April 2005.

Image0757

 தன்மானத்தலைவர் நரேந்திர மோடியைப்பற்றி எஸ்.வீ.ரமணியின் விமர்சனம்.

                                                                                                                                               எஸ்.வீ.ரமணி அவர்கள் 2005ந்தாம் ஆண்டு ஏப்ரல் மாதம் எங்கள் பாரதம் தமிழ் மாத இதழில், தன் மானத் தலைவர் நரேந்திர மோடி  என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.

 

அன்பார்ந்த நண்பர்களே..!

 வெள்ளைய சர்வாதிகார அரசு இந்திய நாட்டு உள்விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் காரணம் என்ன? அமெரிக்காவின் இந்திய தூதர் முல்போர்டு குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு  நடந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி அதற்கு மோடி அரசுதான் காரணம் என்கிறார். இப்படித்தானே நாடாளும் ஆசையில் இந்தியாவின் உள் நாட்டு விவகா ரங்களில் தலையிட்ட கிழக்கிந்தியக்கம்பெனியார், வீரபாண்டிய கட்டபொம்மன்,பகத் சிங் போன்ற இலட்சக்கணக்கான இந்தியர்கள் மீது குற்றங்களை சுமத்தி, அவர்களை தூக்கு மேடையில் தொங்கவிட்டு மகிழ்ந்தார்கள். அதைப்போல் அமெரிக்கா   தாங்கள்தான்,உலகத்தையே ஆளப்பிறந்தவர்கள் என்ற ஆணவததில் தங்களுக்கு பல்லக்கு தூக்க விரும்பாத நாடுகளை இன்று அழிக்க நினைக்கிறது. அன்று இலட்சக்கணக்கான இந்திய சுதந்திர போராட்டத்தியாகிகளை வெள்ளையர்கள் கொன்று இந்தியர்களை அடிமைகளாக்கி ஆட்சி புரிந்தார்கள். இன்று இலட்சக்கணக்கான இராக்கிய முஸ்லீம்களைக் கொன்று இராக்கியர்களின் தலைவர் சதாம ஹுசேனை நாயைப்போல் பட்டியில் அடைத்து சித்திரவதை செய்து வரும் அமெரிக்கா  ,தன்னை உலக ரட்ச்சகனாக காட்டிக்கொள்கிறது.

 

ஒரு பக்கம் இஸ்லாமியர்களை கொலை செய்து மறு பக்கம் அவர்களுக்கு ஆதரவு காட்டுவது போல் நடிக்கிறார்கள் அமெரிக்க வேடதாரிகள். பத்தாம் நூற்றாண்டு முதல குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை உங்களுக்கு நினைவு

படுத்துகிறேன்.வடக்கே பாலைவனத்தையும் கிழக்கே விந்திய மலையையும் கொண்ட செழிப்பான மாநிலம் குஜராத். ஆயிரத்தி இருபத்தி  நான்காம் ஆண்டு முகம்மது கஜ்னியின் படையெடுப்பால் சோமநாதர் ஆலயம் சூறையாடப்பட்டு  பல ஆயிரம்

இந்துக்கள் கொலை செய்யப்பட்டார்கள். 1396 ஆண்டு ராஜபுத்திர பரம்பரையில் இருந்து முஸ்லிமாக மதம் மாறிய காபர்கானின் புரட்சியால் குஜராத் முஸ்லிம் மாகாணமாக உருவாகியது. காபர்கானின் மகன் அகம்மதுவும 1411-1441  ஆண்டுகளில் அகம்மது நகர,அகமதாபாத் என்று தன் பெயர்களில் நகரங்களை உருவாக்கினான்.

 

2002 பிப்ரவரி இருபத்தி ஏழாம் தேதி காலை எட்டு மணிக்கு, ஆமதாபாத்திற்கு செல்லவேண்டிய பைசாபாத் அகமதாபாத் சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயில வண்டியில் எஸ் ஆறு, எஸ் ஏழு பெட்டிகளில் அயோத்தி இராம பக்தர்கள் இருந்தார்கள். கோத்ரா இரயில நிலையத்தில் வண்டி நின்ற போதுதான் முஸ்லிம் தீவிரவாதிகள் இராம பக்தர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசவே எஸ் ஆறு பேட்டி முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த அநாகரீக தாக்குதல் காரணமாக ஐம்பத்தி ஏழு பக்தர்களும், கர்ப்பிணிப் பெண்களும், சிறு குழந்தைகளும் தீயால் செத்து மடிந்தார்கள். இதன் பின்தான் குஜராத்தில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பெரும் கலவரம் மூண்டது. இதற்கு மோடிதான் காரணமா? இந்திய விடுதலைக்கு முன் வெள்ளையர்களின் பிரித்தாளும் கோட்பாடுகளால்,இந்து,முஸ்லிம் மதவெறி தூண்டி விடப்பட்டு அன்றும் பல்லாயிரக்கணக்கான் இந்து முஸ்லிம்கள் அடித்துக்கொண்டு செத்தனர். இன்றும் அந்த மத வெறியை அமெரிக்கா தூண்டிவிட்டு கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கிறது.

 

2002 செப்டம்பர் இருபத்தி நான்காம் தேதி மாலை நாலரை மணி அளவில் குஜராத் தலை நகரம் காந்தி நகரில் உள்ள உலகப் புகழ் பெற்ற சுவாமி நாராயன் கோவிலுக்குள்ளே புகுந்த பாகிஸ்தான் இஸ்லாமியத் தீவிரவாதிகள் அங்கு வழி பாட்டிற்கு வந்த முப்பத்தி மூன்று பக்தர்களைக்கொன்று,நூற்றுக்கணக்கான இந்துக்களை காயப்படுத்தி இரத்த வெள்ளத்தில் மிதக்கச்செய்திருக்கிறார்கள். இதற்காக அமெரிக்கா,பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பை பாராட்டி மகிழ்கிறதா? 1835 ஆம் ஆண்டு

மெக்காலே இலண்டன் பார்லிமென்டில் கூறியது போல, இந்தியாவின் பாரம்பரியக் கல்வி, கலாச்சாரத்தை அழிப்பதன் மூலம், இந்தியாவையும் மீண்டும் அடிமை கொள்ள அமெரிக்கா திட்டம் தீட்டுகிறதா? என்று தெரியவில்லை.

 

இன்றும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில்,பாகிஸ்தானால் எல்லை தாண்டி நடத்தப்படும் தீவிரவாதச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து அங்குள்ள பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் குறி வைத்துக் கொல்லப்படுகின்றனர். அங்குள்ள இந்துக்கோயில்கள் இடிக்கப்படுகின்றன. அமெரிக்க புஷ்ஷின் அரசாங்கம் இவைகளை ஏன் தட்டிக்கேட்கவில்லை. முஷாரப் அமெரிக்காவால் பாராட்டப்படுகிறார். இப்படித்தான் கிழக்கிந்தியக் கம்பெனியார் இந்தியாவில் காலடி எடுத்து வைத்ததுமே இந்து,முஸ்லிம்களிடையே துவேஷ உணர்வைத்தூண்டி கிருத்துவ மதத்தை பரப்ப பாதிரியார்களை அனுப்ப ஆரம்பித்தார்கள்.

 

1604 ஆம் ஆண்டு ஆக்ரா சர்ச்சில் நாற்பது இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களாக மத மாற்றம் செய்யப்பட்டனர். வெள்ளையர்கள் அக்பர் ஆட்சி காலத்திலேயே மத மாற்றச் செயல்களைத்துவங்கி விட்டனர். ஒரு நாட்டை அடிமை கொள்ள வேண்டுமானால் அங்குள்ள மதங்களை அழித்துவிடு என்பதே ஆங்கிலேயர் சித்தாந்தம். அன்று கோவாவில் இருந்த போர்ச்சுக்கீசியர்களின் மதத் தலைவரான ஜெரோமி சேவியர்என்பவர் கிருஸ்துவ மதத்தத்துவங்களை பெர்சிய மொழியில் பல புத்தகங்களாக தயாரித்து 1609  ஆம் ஆண்டு தில்லிப் பேரரசராக இருந்த அக்பரின் மைந்தர் ஜஹாங்கீரிடம்  கொடுத்தார். ஆனால் ஜெரோமியின் புத்தகங்கள் முஸ்லிம்களை தப்பான வழியில் திருப்பி,கிருஸ்துவ மதத்திற்கு மாற்றவே எழுதப் பட்டவை. என்று 1621  ஆம் ஆண்டு பெர்சியாவில் இருந்த ஜெயுனுலாப்தீன் என்பவர் மக்களுக்கு உண்மையை விளக்கினார். ஏசுவின அதிசயச் செயல்களும் குரானில் சொல்லப்பட்ட இஸ்லாமின் அற்புதச் செயல்களும் வெவ்வேறானவை என்பதை ஆதாரத்துடன் அவர் வாதிட்டார். அவருடைய பேச்சால் கிரூஸ்துவப் பிரச்சாரம் எடுபடாமல் போயிற்று.

 

ஐரோப்பியர்களின் பொய்யான மதப்பிரச்சாரங்களை போல இப்பொழுது இந்தியாவில் வாழும் பெரும்பான்மை இந்துக்களை அழிக்க, பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அமெரிக்கா ஆதரவு காட்டி வருகிறது. இந்தக் காரணத்திற்காக இராக்கில் வாழும் இலட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்படுவதையும் பாகிஸ்தான் அதிபர் முஷாரப் ஆதரிக்க முடியுமா?

 

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்தே பல  கிருஸ்துவ மதப்பிர்ச்ச்சாரர்கள் இந்தியா நோக்கி படையெடுத்து,முஸ்லிம்களையும்,இந்துக்களையும் மதமாற்றம் செய்ய ஆரம்பித்தனர். 1764 ஆம் ஆண்டு பக்சரில் முகலாயர்களின் ஆட்சியை ஆங்கிலேயர்கள் தடுத்து நிறுத்தியது வரையிலும் அதற்கு பின் இந்தியா விடுதலை அடையும் வரையிலும் இந்தியர்கள் கணக்கிலடங்காத துயரங்களை அனுபவித்தார்கள். ஆங்கிலேயர்களின் மதத் துவேஷ பிரச்சாரத்தால் இந்து,முஸ்லீம்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு செத்து மடிந்தார்கள். மீண்டும் அந்த மதத்துவேஷ உணர்வை அணையாமல் கொழுந்து விட்டு எரியச்செய்து,அதில் குளிர் காய வேண்டும் என்று நினைக்கும் அமெரிக்காவின் விபரீத ஆசை நியாயமானதா?

 குஜராத் முதல்வர் மோடியை  அமெரிக்காவில் நுழையக்கூடாது என்று. இன்று தடை செய்யும் அமெரிக்கா,அன்று அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தரின், இந்திய கலாச்சார பெருமைகளை விளக்கும் சொற்பொழிவுகளுக்கு எதிர்ப்பு காட்டி அவரை பேசவிடாமல் தடுத்ததுதான் நினைவுக்கு வருகின்றன. ஆனால் சுவாமி விவேகானந்தரோ எல்லா எதிர்ப்புக்களையும் தூள்தூளாக்கி இந்தியாவின் இந்து மதப் பெருமைகளை அமெரிக்க,இலண்டன் போன்ற நாடுகளில் வானளாவ உயர்த்திக்காட்டினார். பாரதத்தின் ஆன்மிகப்பெருமைகளையும்,இந்திய மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதற்காகவும் அரும்பாடுபடும் குஜராத் முதல்வர்,தன்மானத்தலைவர் நரேந்திர மோடி அவர்களின் பெருமையையும் உலகம் விரைவில் அறிந்து கொள்ளும். இராக்கில் ஒரு நிலை, இந்தியாவில் வேறு நிலை என்று மத வெறியைத்தூண்டும்  அமெரிக்காவின் துரோக நிலையை உலகம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது. 

 

[எங்கள் பாரதம் தமிழ் மாத இதழில் ஏப்ரல் மாதம்  இரண்டாயிரத்து ஐந்தில எஸ்.வீ.ரமணியால் எழுதப்பட்ட கட்டுரை] நன்றி,வணக்கம்.

It is our desire that Hindus and Muslims in India should live as Indian nationals and friends with mutual understanding.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: