Posted by: ramrajya | January 11, 2015

கருணாநிதி பிஜேபியை ஏமாற்று தந்திரம் கற்றவர்கள் என்று கூறுவதைவிட,ஏமாற்று வேலையில் தான்,தான்,தலை சிறந்தவன் என்று கூறிக்கொள்ளலாம்.

கருணாநிதி பிஜேபியை  ஏமாற்று தந்திரம் கற்றவர்கள் என்று கூறுவதைவிட,ஏமாற்று வேலையில் தான்,தான்,தலை சிறந்தவன் என்று கூறிக்கொள்ளலாம்.

 குடும்ப ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வரவேண்டும் என்று கனவு காணும் கருணாநிதி, திமுக கழகப் பொதுக்குழுவில், பா.ஜ.க. தமிழகத்தில் காலூன்றி இருக்கிறது,அப்படி காலூன்றி இருக்கிற இந்த ஆட்சியில்,தமிழ் நாட்டு மக்களை ஏமாற்றுகிற காரியங்களும் நடை பெற்று கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், ஜெயலலி தாவைவிட – ஏமாற்றுத் தந்திரம் கற்றவர்கள், மத்தியில் இன்றைக்கு நம்மை ஆளுவதற்காக வந்திருப்பதாகச் சொல்லிக் கொண்டு நோட்டம் பார்க்கிறார்கள். ஆகவே நாம் அவர் களிடத்திலே ஏமாந்து விடக் கூடாது. என்று கூறி உள்ளார். நான் கருணாநிதியைக் கேட்கிறேன், வாஜ்பாய் மந்திரிசபையில் திமுக அங்கம வகித்தபோது, மாறன,பாலு மூலமாக எல்லா வசதிகளையும் பெற்றுக்கொண்டு,பிறகு அவர்களை ஏமாற்றி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்த கதையை மக்களை கேட்டாலே எடுத்து விலாவாரியாக சொல்வார்கள்.

பூனை கண்ணை மூடிக்கொண்டால், உலகமே இருண்டு விட்டது என்று சொல்வது போல் உள்ளது கருணாநிதியின் பேச்சு.

தலைநகர் டெல்லியில் 10-1-15  அன்று நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி அவர்கள், காங்கிரஸ் கட்சியோ,ஆம் ஆத்மி கட்சியோ ஏழைகளின் கட்சி அல்ல,உண்மையில் ஏழைகளின்  கட்சி பா.ஜ.க.தான் என்று கூறி உள்ளார். “ஜன தன்” திட்டம் மூலம் ஆறு கோடி வங்கி கணக்குகள் துவக்கப்படவேண்டும் என்று திட்டமிட்டோம், ஆனால் பதினோரு கோடி வங்கிக்கணக்குகள் துவக்கப்பட்டு பாஜக ஏழைகளின் கட்சி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்று மோடி கூறினார்.

கனி மொழிக்கும்,ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் கட்சி பதவியை கொடுக்கவேண்டும் என்று துடி,துடிக்கும் கருணாநிதி, எந்த நீண்டநாள் ஏழை திமுக தொண்டனுக்காவது கட்சியின் உயர்ந்த பதவியை கொடுப்பதைப் பற்றி மனத்தளவிலாவது  நினைத்திருக்கிறாரா? பிஜேபியில் இணைந்த போதும் தனது சொந்த பந்தங்களுக்குத்தானே மந்திரி பதவியை வாங்கி கொடுத்தார்.

 கருணாநிதி பிஜேபியை  ஏமாற்று தந்திரம் கற்றவர்கள் என்று கூறுவதைவிட,ஏமாற்று வேலையில் தான் தான்,தலை சிறந்தவன் என்று கூறிக்கொள்ளலாம்.

bjp


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: