Posted by: ramrajya | January 22, 2015

ஸ்ரீரங்கத்தில் டிபாசிட் இழக்கப்போகும் திமுகவுக்கு ஆதரவு கொடுக்க எந்த கட்சியினரும் தயாராய் இல்லை.

 ஸ்ரீரங்கத்தில் டிபாசிட் இழக்கப்போகும் திமுகவுக்கு ஆதரவு கொடுக்க எந்த கட்சியினரும் தயாராய் இல்லை.

ஸ்ரீரங்கத்தில் திமுகவின் நிலை பரிதாபத்திற்கு உரிய நிலையில் உள்ளது. புதிய கூட்டணியை உருவாக்கி அதிமுகவை தோற்கடித்து விடலாம் என்ற கருணாநிதியின்  கனவு,பகல்கனவாக முடிந்து விட்டது. எந்த எதிர் கட்சிக்காரர்களும் திமுகவை ஆதரிக்க முன் வரவில்லை. திமுக வேட்பாளரை பொது வேட்பாளராக கருதி வாக்களிக்கவேண்டும் என்ற கருணா நிதியின் அறிக்கை குப்பைத்தொட்டியில் போடப்பட்டது. 2016 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு,பிஜேபியும் ஸ்ரீரங்கம் தொகுதியில் வேட்பாளரை இது வரை நிறுத்தவில்லை. இந்த நிலையில் டிபாசிட் இழக்கப்போகும் திமுகவுக்கு ஆதரவு கொடுக்க யாரும் தயாராய் இல்லை.

ஸ்ரீரங்கம் பணிக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் ஆளுங்கட்சிக்கு இணையாக பணத்தால் நெருக்கடி கொடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் அதனால் சம்பாதித்ததை செலவு பண்ணுங்க என்று கூறி உள்ளதாக 22-1-2015 தினமலர் செய்தியில் வெளிவந்துள்ளது.கட்சிக்காரர்கள் சம்பாதித்த பணத்தை செலவு பண்ண என்ன பைத்தியக்காரர்களா?

திமுக மற்ற கட்சியினரிடம் ஆதரவு கொடுங்கள் என்று பரிதாபமாக  கேட்பதை விட்டு விட்டு,ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் இருந்து விலகிக்கொண்டால்,அதற்கு பெருமையாக இருக்கும். மக்களின் முதல்வர் ஆதரவு பெற்ற ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளரை யாராலும் வெற்றி காண முடியாது.

pichai


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: