Posted by: ramrajya | January 30, 2015

Why Tamil Nadu Police objecting people to return to their Mother Religion?

Why Tamil Nadu Police objecting people to return to their Mother Religion?

 இந்துக்கள்,கிருஸ்துவர்களாகவும்,முஸ்லீம்களாகவும் மதமாற்றம் செய்யப்படுவதுற்கு ஆதரவாக இருக்கும் காவல்துறை, இப்போது தாய் மதம் திரும்புவோரை ஏன் தடுக்கவேண்டும்?    

[Malai Malar] செய்தி.   சென்னை, ஜன. 30–செய்தியைப்படியுங்கள்.

 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த சுமார் 100 பேர் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதங்களில் இருந்து விலகி மீண்டும் தாய் மதமான இந்து மதத்துக்கு திரும்ப விருப்பம் தெரிவித்தனர்.

 இதையடுத்து அவர்கள் 100 பேரையும் மீண்டும் இந்துக்களாக முறைப்படி மாற்றுவதற்கான ஏற்பாடுகளை இந்து மக்கள் கட்சி செய்தது.

 சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் இன்று காலை அந்த 100 பேரும் இந்துக்களாக மாறும் சடங்குகள் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்தன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மீஞ்சூர் உள்பட புறநகர் பகுதிகளில் இருந்து வாகனங்களில் சுமார் 100 கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் புறப்பட்டனர். இது பற்றி தெரியவந்ததும், அவர்கள் 100 பேரையும் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில் சென்னை போலீசார் ஈடுபட்டனர்.

 எந்தெந்த பகுதிகளில் இருந்து 100 பேரும் புறப்பட்டார்களோ, அங்கேயே அவர்கள் தடுக்கப்பட்டனர். அதையும் மீறி சிலர் வாகனங்களில் ஏறி மேற்கு மாம்பலம் நோக்கி புறப்பட்டனர். அந்த வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. இந்து மதத்துக்கு மாறும் நிகழ்ச்சிக்கு யாரும் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டனர்.

 இதற்கிடையே இந்து மதத்துக்கு மீண்டும் வருபவர்களை வரவேற்க இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அண்ணா நகரில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்டார். அவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி வீட்டுக்காவலில் வைப்பது போல வைத்தனர். அவர் வீட்டை சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

 

அர்ஜூன் சம்பத் போலீசாரிடம் ‘‘நான் ஏன் போகக்கூடாது. இந்து மதத்துக்கு மாறும் 100 பேரும் அவர்களாக விரும்பித்தான் வருகிறார்கள். நாங்கள் யாரையும் கட்டாய மத மாற்றம் செய்யவில்லை. அவர்கள் இந்து மதத்துக்கு திரும்பி வர முழுவிருப்பம் தெரிவித்து கடிதம் கொடுத்து இருக்கிறார்கள்’’ என்று விளக்கமாக கூறினார்.என்றாலும் போலீசார் அர்ஜூன் சம்பத்தை வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை.

 இந்துக்கள்,கிருஸ்துவர்களாகவும்,முஸ்லீம்களாகவும் மதமாற்றம் செய்யப்படுவதுற்கு ஆதரவாக இருக்கும் காவல்துறை, இப்போது தாய் மதம் திரும்புவோரை ஏன் தடுக்கவேண்டும்? 

cc

 

 

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: