குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா.
SUN Directல் “Naming Ceremony” என்று ஒரு விளம்பரப்படம் வெளியிட்டிருக்கிறார்கள். இதில் எல்லா தமிழகக் குடும்பங்களிலும் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் நடந்து அவர்களுக்கு பிறக்கும் முதல் குழந்தைக்கு புண்ணியாவசனத்தின் போது என்ன பெயர் வைப்பார்கள் என்பதை பற்றி சித்தரித்துள்ளது. என்ன பெயர் வைப்பது என்பதில் பெண்,பிள்ளை இரு வீட்டாரும்,தங்கள் அப்பாவின் பெயரத்தைத்தான் வைக்கவேண்டும் என்று போட்டி போடுவார்கள்.உலக கிரிக்கெட் கோப்பை போட்டி நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பெண்ணின், கணவன் கிரிக்கெட் ரசிகர் போல் உள்ளது, தன் குழந்தைக்கு,கிரிக்கெட் விளையாட்டு வீரர் “Chris Gayle” பெயரை அய்யரிடம், வைக்கச் சொல்கிறார். அய்யரும் மகிழ்ச்சியோடு சம்மதிக்கிறார். இது விளம்பரப் படமாக இருந்தாலும், ஒரு சின்ன காட்சியில் இரு வீட்டாரும் ஏற்றுக்கொள்ளும்படி,குழந்தைக்கு பெயரும் வைத்தாயிற்று, உலக கிரிக்கெட் கோப்பையைப் பற்றி விளம்பரமும் செய்தாயிற்று. விளம்பரப்படம் என்றால் இதைப்போல் அல்லவா இருக்க வேண்டும். SUN Directக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.
Leave a Reply