Posted by: ramrajya | March 30, 2015

கருணாநிதி ஏன் இந்த சகுனி வேலையை செய்கிறார் என்று தெரியவில்லை?

கருணாநிதி ஏன் இந்த சகுனி வேலையை செய்கிறார் என்று தெரியவில்லை?

 மக்களின் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வழிகாட்டுதல்படி தமிழக நிதி நிலை அறிக்கை வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ளது நீதி மன்றத்தை அவமதிக்கும் செயல் என்று கூக்குரல் எழுப்பி உள்ளார் கருணாநிதி. சர்க்காரியா கமிஷனால் விஞ்ஞான முறையில் ஊழல் செய்தவர் என்று கூறப்பட்ட கருணாநிதி சட்டத்தை ஏமாற்றி முதலமைச்சராக பதவி வகித்து,தமிழக மக்களையும் ஏமாற்றவில்லையா ? இதை யாராவது அன்று தட்டிக் கேட்டார்களா? திமுக குள்ள நரிகளால் பொய்யான குற்றம் சுமத்தப்பட்டு குற்றவாளிக் கூண்டிலே நிற்கும் ஜெயலலிதா என்றும் மக்களின் முதல்வர்தான்.

 அம்மா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தங்கள் பிழைப்பில் மண் விழுந்து விடுமே என்று அஞ்சும் இந்த அவலங்கள் செய்த தில்லு முல்லுகளை இந்த நாட்டு மக்களே அறிவார்கள். ஊழலிலே ஊறித்திளைத்த இவர்கள் சத்திய சீலர்களாக சந்து முனை சிந்து பாடுகிறார்கள். மூன்று  முறை முதலமைச்சராகவும், அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் இருக்கும் ஜெயலலிதா அவர்களின் வழிகாட்டுதல்படி நிதி நிலை அறிக்கை வெளியிடுவதுதான் அக்கட்சியின் ஏற்புடைய செயல். மக்கள் முதல்வரின் எண்ணமெல்லாம், தமிழக மக்களின் நல்வாழ்விலேயே நாட்டம் கொண்டுள்ளது. தமிழக மக்களின் நல்வாழ்வுதான் அவரது இலட்சியமாக இருக்கும்போது மாண்புமிகு பன்னீர் செல்வம் அவர்கள் போற்றுதலுக்குரிய அம்மா அவர்களின் வழி காட்டுதல்படி நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறியதில் எந்த தவறுமே கிடையாது.அவர் எந்த ரகசிய காப்பு உறுதி மொழியையும்  மீறவில்லை..

 இதிகாச புராணம் இராமாயணத்தில், காட்டுக்குச் சென்ற இராமனின் பாதுகையை வைத்து பரதன் நாடாண்டதாக வரலாறு கூறுகிறது.  இராமனின் பாதுகையை வைத்து எப்படி நாடாளலாம் என்று யாரும் கேள்வி கேட்டதாக கூறப் படவில்லை. கூனி கூட அப்படி கேட்கவில்லை.

 கருணாநிதி ஏன் இந்த சகுனி வேலையை செய்கிறார் என்று தெரியவில்லை?

jaya


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: