Posted by: ramrajya | April 8, 2015

மோடியின் சமுதாய நலத்திட்டங்கள் கடைக்கோடி கிராமத்தானுக்கும் விளக்கப்பட்டால் பிஜேபி தமிழகத்தில் காலூன்றும்.

மோடியின் சமுதாய நலத்திட்டங்கள் கடைக்கோடி கிராமத்தானுக்கும் விளக்கப்பட்டால் பிஜேபி தமிழகத்தில் காலூன்றும்.

 பிஜேபி தமிழகத்தில் வளர வேண்டுமானால்,திராவிட கட்சிகளின் கையில் அது சிக்கி இருக்கிறது என்ற எண்ணம் தேவையில்லை. அது வளர்ந்தவிதம்., பிராமண,கடவுள்,இந்து மத எதிர்ப்புக்கொள்கைகளை தன் கட்சியின் கோட்பாடாக கொண்டு வளர்ந்தது. அந்த கொள்கைகள் இன்று மறைந்து கொண்டு வருவதை கருணாநிதியே  தன் முக நூலிலேயே விளக்கி உள்ளார்.  

தி.மு.க.வைப் பற்றி நீங்கள் கூறும் பரவலான கருத்து உண்மை யானதல்ல; எல்லா மதங்களையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்பது தான் எங்களுடைய கருத்து. இன்னும் சொல்லப் போனால், தி.மு. கழகத்திலே உள்ள 90 சதவிகிதம் பேர் நீங்கள் கூறுகின்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் தான். ஆனால் இந்து மதத்திற்கே தாங்கள் தான் பாதுகாவலர்கள் என்பதைப் போலச் சொல்லிக் கொள்ளும் ஒரு சிலரின் தீவிரவாதச் செயல்பாடுகளைத் தான் நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.என்று சொல்லி உள்ளார்.

 திராவிட இயக்கங்கள் இன்று தங்கள் பகுத்தறிவுவாதக் கொள்கைகளானபிராமண,கடவுள்,இந்து மத எதிர்ப்பு கொள்களை விட்டால்தான் வளர முடியும் என்ற நிலைக்கு வந்து விட்டன். ஆகவே பிஜேபி தமிழக திருக்கோயில்களின் திருவிழக்காலங்களில் அங்கு சென்று,மக்களுக்கு மோடி அரசு மக்களுக்காக செய்து கொண்டிருக்கும் பல மக்கள் நல்வாழ்வு  திட்டங்களை விளக்கி அதில் மக்கள் எப்படி எல்லாம் பலன்களை அடைய முடியும் என்பதையும் பாமர மக்களுக்கு விளக்கி அவர்களை பிஜேபி கட்சியின் அங்கத்தினர்களாக சேர்க்கவேண்டும். மோடி அவர்களின் சமுதாய நல்வாழ்வு திட்டங்களை விளக்கும் இணையத் தொடர்பை இத்துடன் கொடுத்துள்ளேன்.

 http://modiachievements.in/category/schemes/

 தமிழக பிஜேபி தலைவர்கள் கட்சியின் கிளைகளுக்கு அறிக்கை அனுப்பி,அங்குள்ள தலைவர்களை பொது நிகழ்ச்சியில் ஆடல்,பாடல் நிகழ்ச்சிகள் மூலமாக  மோடியின் சமுதாய நலத்திடன்களை, மக்களுக்கு அறிமுக படுத்தவேண்டும். அயாராது பாடு பட்டால் பிஜேபி அரசு தமிழகத்தில்  காலூன்ற முடியும்.

http://modiachievements.in/category/schemes/


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: