Posted by: ramrajya | April 21, 2015

மைலை அர்ச்சகரின் பூணூலை அறுத்த சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து நீதி வழங்கவேண்டும்.

மக்களின் முதல்வர் வழிநடக்கும் தமிழக முதல்வர் மைலை அர்ச்சகரின் பூணூலை அறுத்த சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து நீதி வழங்கவேண்டும்.

தாலி அறுப்பு போராட்டத்தை துவக்கி இருக்கும் வீரமணியின் விசுவாசிகள் காது கேளாத மைலை முதிய கோவில் அர்ச்சகரை தாக்கி அவர் பூணூலை அறுத்து இருக்கிறார்கள். இந்த பேடிகள், முஸ்லிம் பெரியவர்களையோ, கிருத்துவ குருமார்களையோ தாக்கி இருந்தால் கருணாநிதியில் இருந்து இளங்கோவன் வரை மூச்சை பிடித்துக்கொண்டு முழக்கமிட்டிருப்பார்கள்.

இங்கிருக்கும் பிஜேபி தலைவர்கள் இதை ஏன் தட்டிக்கேட்க முன் வரவில்லை என்று தெரியவில்லை. மத சார்பற்றவர்கள் என்று சொல்பவர்கள்,எந்த மதத்தாரையும் யாரும் தாக்கக்கூடாது என்பதை உணர்ந்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை.கருணாநிதிக்கு தலித்துக்கள் தாக்கப்படக்கூடாது,ஆனால் பிராமணர்கள் தாக்கப்படலாம் அவர்கள் பூணூல் அறுத்து எறியப்படலாம். பிராமணர்கள் அவருக்கு யோகா கற்றுக்கொடுக்கவும்,மருத்துவம் பார்க்கவும் மற்றும் பல வேலைகளுக்கு எடுபிடியாக இருக்க வேண்டும். இன்று ஒரு சில பேடிகள் வலிவில்லாத பிராமணர்களை தாக்குவதையும், அவர்கள் பூணூலை அறுப்பதையும் கண்டிக்க கருணாநிதி  முன் வராதது ஏன் என்று தெரியவில்லை.

நமது மக்களின் முதல்வர் வழி நடக்கும் தமிழக முதல்வர் இந்த காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அர்ச்சகரை தாக்கி பூணூலை அறுத்தவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும். பாதிக்கப்பட்ட முதிய பிராமணருக்குதகுந்த வைத்திய வசதிகள் அளிப்பதோடு, இனிமேல் இதைப்போன்ற அநாகரீக செயல்கள் தொடராமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.   

mylai archkar


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: