Posted by: ramrajya | April 21, 2015

Periar and Nagammai. பெரியாரும், நாகம்மையும்.

Periar and Nagammai. பெரியாரும், நாகம்மையும்.                

அன்புள்ள நண்பர்களே பெரியார் பற்றிய சுவையான நிகழ்ச்சி ஒன்றை உங்களுக்கு சொல்ல விரும்புகின்றேன்.

பசுத்தாய் செப்டம்பர் 2004 மாத இதழில் சாமி சிதம்பரனார் என்பவர் 1939 ஆம் ஆண்டு எழுதிய நூல் ஒன்றில் பெரியாரைப்பற்றி விமர்சித்ததை வெளியிட்டுள்ளார்கள்.

அந்த நாளில் பெரியார் பெரும்பாலும் விலை மாதர் இல்லங்களிலேயே புகுந்து புறப்படுவார். நிலாக்காலங்களில் பெரியார் அவர் கூட்டாளிகளும் விலை மாதர் கூட்டத்துடன் காவிரி ஆற்று மணலுக்குச்செல்வர். இரவு முழுதும் ஆற்று மணலில் கூத்தடித்து விட்டு விடியற்காலை வீட்டிற்கு திரும்புவர்.

இக் கூட்டத்துக்கு பெரியார் வீட்டில் இருந்துதான் சாப்பாடு கொண்டு போக வேண்டும். சாப்பாடு போகும் செய்தி தாய் தந்தையருக்கு தெரியக்கூடாது. இச்சமயம் பெரியார் தன் மனைவி நாகம்மையின் உதவியை நாடுவார். அம்மையாரும் வீட்டார் அறியாமல் கணவர்  விரும்பும் உணவுகளை ஆக்கி விடுவார். அவ்வுணவுகள் வீட்டு புழக்கடை வழியாக வண்டி ஏறி காவிரிக்கு போய்விடும்.

வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ஆரிய மாயையில் இலக்கியத்து நளாயினியின் வரலாற்றை இழிவாக எழுதிய பெரியாருக்கு அவர் வீட்டில்  நாகம்மை வடிவில் வாழ்ந்த நளாயினியை கவனிக்க நேரமில்லையா என்று தெரியவில்லை.

தாசி வீட்டுக்கு கணவனை தூக்கிச் சென்ற நளாயினிக்கும்,தாசிகளுடன் சல்லாபிக்க அறுசுவை ஆக்கிக் கொடுத்த நாகம்மைக்கும் பெரிதாக வேறுபாடு ஒன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தனது தள்ளாத வயது காலத்தில் ஆத்ம உணர்வுடன்,தனது நட்பை பகிர்ந்து கொள்ள ஒரு இளவயது பெண்தான் சரியாக இருப்பாள் என்ற பகுத்தறிவு எண்ணத்தோடுதானே பெரியார் தன் எண்பதாவது வயதில் மணியம்மையை மணந்தார். எந்த விஷயத்தையும் பகுத்தறிவோடு அணுக வேண்டும் என்று பக்கம் பக்கமாய் கட்டுரை எழுதிய அண்ணா,பின்னர் ஏன் பெரியார் தனது தள்ளாத வயதில் இளம் பெண்ணை மணந்தார் என்ற ஒரே காரணத்துக்காக தி.கவை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்ல புதுக்கட்சியைத் தொடங்கினார்?அவர் அப்போது பெரியாரின் பகுத்தறிவு பின் தங்கிய ஒன்று என்பதை உணர்ந்து விட்டார் என எடுத்துக்கொள்ளலாமா?

பசுத்தாய் இதழில்  வெளியிடப்பட்டுள்ள சாமி சிதம்பரனாரின் கருத்துக்களுக்கு,நமது பகுத்தறிவு வாதிகள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?   


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: