Posted by: ramrajya | May 13, 2015

A request to B.J.P. Leaders in Tamil Nadu. தமிழக பிஜேபி இயக்க தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

A request to B.J.P. Leaders in Tamil Nadu.

தமிழக பிஜேபி இயக்க தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

 நான் பிஜேபி இயக்கத்தின் சாதாரணத் தொண்டனாக கடந்த இருபது ஆண்டுகளாக இருந்து வருகிறேன். தமிழகத்தில் பிஜேபி இயக்கம் வளர வேண்டுமானால்,தற்போது உள்ள நிலைமையில், வரும் 2016 தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைப்பதன் மூலம்தான் முப்பது இடங்களையாவது பிஜேபி கைப்பற்ற முடியும் என்பது என் கருத்து.  அதிமுகவும் இந்துமத பண்பாடுகளுக்கும், ஆன்மீக கொள்கைகளுக்கும்,மத சார்பற்ற முறைகளுக்கும் துணை நிற்கும் கட்சியாக இருந்து வருகிறது.

 அதிமுக திராவிட இயக்கம் என்ற பெயரில் சாதி வெறியை தூண்டும் இயக்கங்களுக்கு துணை போகாமல் எல்லா இனத்தாரையும் அரவணைத்துச் செல்லும் கோட்பாடுகளில் சிறந்து விளங்குகிறது.

வீராணம் ஊழலில் இருந்து,  2G அலைக்கற்றை ஊழல்வரை செய்து விட்டு தன்னை உத்தமனாக சொல்லிக் கொள்கிறது திமுக. தன்னை எதிர்ப்பவர்கள் எந்த சாதி என்று தரம் பிரித்து பார்த்து அவர்களை வசை பாடுவதிலேயே காலத்தைக் கடத்துகிறது. இந்துக்களை திருடன் என்று அர்த்தம் கூறி, இன்று கட்சியை வளர்க்க இராமானுஜர் கதை எழுதுவதாக சொல்கிறார் அந்தக் கட்சியின் தலைவர்.

 திராவிட இயக்கம் என்று சொல்லும் கட்சிகள் சாதி வெறியை  பரப்பாமல் இருந்தால், பிஜேபி கொள்கைகளுக்கு இணைந்தாக இருக்கும். தற்போது உள்ள நிலைமையில் பிஜேபியின் கொள்கைகளுக்கு ஆதரவாக இருப்பவர்கள் என்று பார்த்தால் அதிமுகவைத்தான் தகுதி உடையவர்களாக நான் நினைக்கிறேன்.

 பிஜேபி கட்சி தமிழகத்தில் வளர,அதிமுகவின் ஒத்துழைப்பு அவசியம் தேவை. இதில் பிடிவாதம் காட்டாமல், பிஜேபியின் பண்பும், அறிவும் படைத்த பெருந்தலைவர்கள் நன்கு சிந்தித்துப் பார்த்து, தமிழக சட்ட மன்றத்தேர்தலில் நமது இயக்கம் வெற்றி கண்டு கட்சி வளர இதை விட சிறந்த வழி இருக்குமா என்று பார்த்து முடிவு எடுக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.  

நன்றி,வணக்கம்.

  

 

நன்றி,வணக்கம்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: