Posted by: ramrajya | June 2, 2015

ஐயோ பாவம் ராமசாமி.. Ayoo Paavam Ramasamy.

ஐயோ பாவம் ராமசாமி.. Ayoo Paavam Ramasamy.

 டிராபிக் ராமசாமி இடைத்தேர்தலில் நிற்பது அவரது உரிமை. ஆனால் அதற்காக யாரிடம் ஆதரவு கேட்பது என்பது பற்றி அவர் சிறிது சிந்தித்து இருக்க வேண்டும். அதிமுகவை எதிர்த்து திமுகவின் சார்பில் வேட்பாளரை நிறுத்த திராணியற்ற கருணாநிதியையும்,பாமக,தேமுதிக போன்ற மற்றவர்களிடம் ஆதரவு கேட்டு சென்றிருக்கிறார்.

 கருணாநிதி யார்? மைலை கோயில் அர்ச்சகர் பூணூல் அறுக்கப்பட்டபோது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாரே தவிர,அதை கண்டிக்க முன் வர வில்லை. இந்துக்களை திருடன் என்று வர்ணித்தவர். ஆனந்த விகடன் பத்திரிகையில் அவர் வீட்டாரைப் பற்றிய கேலி சித்திரம் வந்த போது எனக்கு ஒரு அக்ரகாரத்து மாமி கிடைக்காமலா போவார் கேலி சித்திரம் போட என்று சீறிப் பாய்ந்தவர். டூ ஜி புகழ் ராஜா கைது செய்யப்பட்டபோது, அவர் பூணூல் போட்ட ஆரியரல்ல, தலித் என்பதால் கைது செய்யப்பட்டார் என்று கேலிபேசினார்.. அந்தக் காலங்களிலேயே,பெரியார் அவர்கள் அப்பொழுது நடந்த சட்ட மன்றத்தேர்தலில் மாவூர் சர்மா என்பவரையும், குன்னியூர் சாம்ப சிவ அய்யரையும் ஆதரித்த போது, மயிலாடுதுறையில் நகரப் பூங்காவில்  நடந்த பொதுக்கூட்டத்தில் கருணாநிதி மாவூர் சர்மாவிடம் மண்டியிட்டது யார்? என்று பெரியாரையே கேலி செய்து பேச திராவிட கழகத்தாரால் பெரும் அமளி ஏற்ப்பட்டது. இராஜாஜியின் துணையுடன் இவர்கள் ஆட்சி அமைத்தது வேறு கதை.இவர்களுக்கு ஆதரவு அளித்ததை நினைத்து  பின்பு ராஜாஜியே  வேதனைப்பட்டார்.

 திமுக 2011 தேர்தலில் படுதோல்வி அடைந்ததை பொறுத்துக்கொள்ள முடியாத கருணாநிதி, திமுகவை அழித்து விட்டு அந்த இடத்தில் தருப்பைப் புல்முளைக்கவேண்டும் என்று எண்ணுகின்றனர் என்றெல்லாம் அறிக்கை விட்டார்.

திமுகவின் படு தோல்விக்கு, அதிமுகவோ,மற்ற கட்சிகளோ காரணமில்லை.திமுகவின் இமாலய இலஞ்ச ஊழல்களே காரணம் என்பது கருணாநிதிக்கே நன்கு தெரியும். தேர்தல் தோல்விக்கு அன்று சகவாச தோஷ்ம்தான் காரணம் என்று கூறி இருந்தார் இளங்கோவன் இவர்கள் இருவருமே அன்று உன்னால் நான் கெட்டேன்,என்னால நீ கெட்டாய் என்று சொல்லிக்கொண்டு இன்று மீண்டும் கூட்டணி பற்றி பேசுகிறார்கள்.

சாதியின் பெயரைச்சொல்லி கருணாநிதி கேலி பேசியவர். பண்புடைய வயதுமுதிர்ந்த  டிராபிக் ராமசாமி போன்றோர் கருணாநிதியிடம் சென்று ஆதரவு கேட்பது வேதனையாக உள்ளது. காங்கிரஸ் தோல்விக்கு சகவாச தோஷம்தான் காரணம் என்று இளங்கோவன் அன்று கூறியது  உண்மையான வார்த்தைகள். கருணாநிதி, திமுகவே,ஜெயலலிதாவை எதிர்த்து நிற்கவில்லை இந்த அக்ரகாரத்து ஐயரா ஜெயிப்பார்,ஐயோ பாவம் ராமசாமி என்றுதான் மனதிற்குள் சொல்லிக் கொண்டிருப்பார்.நாமும் சொல்கிறோம் ஐயோ பாவம் ராமசாமி.  

 https://youtu.be/Mcu8VBgem1A


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: