Posted by: ramrajya | August 2, 2015

சசி பெருமாள் போன்ற மது ஒழிப்பு போராட்டத் தியாகிகள் மரணம் மீண்டும் தொடரக்கூடாது. எஸ்.வி.ரமணி.

சசி பெருமாள் போன்ற மது ஒழிப்பு போராட்டத் தியாகிகள் மரணம் மீண்டும் தொடரக்கூடாது. எஸ்.வி.ரமணி.

 கன்னியாகுமரி மாவட்டம்உண்ணாமலைக்கடையில்,சர்ச்,பள்ளி அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி,அப்பகுதி மக்கள் மூன்றாண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர்.காந்தியவாதி சசி பெருமாளும்,நேற்று முன் தினம் நடந்த உண்ணாவிருத போராட்டத்தில் கலந்துகொண்டார். அதன் பின்னும் கடை அகற்றப்படாததால்,தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்த அவர்,அப்பகுதியில் ஊள்ள 150 அடி உயர பி.எஸ்.என்.எல். மொபைல் போன் கோபுரத்தில் ஏறி,மயக்க நிலைக்கு சென்று சரிந்தார். ரத்த வாந்தி எடுத்து உணர்வற்ற நிலையில் இருந்த சசிபெருமாளை,குழித்துறை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றபோது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினார்கள்.

 உலக மகான்காந்தி அடிகளின் தனி நபர் சத்தியாகிரகம் போல,போராடிய சசி பெருமாள், இன்று நம்மிடையே இல்லை. ஆனால் தமிழகம் பூராவும்,பள்ளி,கல்லூரி,வழிபாட்டுத்தலங்கள் அருகே உள்ள மதுபானக் கடைகள்,நம்மைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றன.இதற்கு யார் காரணம்,  

அனைத்துக் கட்சிகளிலும் உள்ள பெருந்தலைவர்கள்தான் காரணம். அவர்கள் உண்மையான மனத்துடன் ஒன்று பட்டு போராடினால்,நிச்சயம் டாஸ்மாக் கடைகள் மறைந்து போவதோடு,பெரிய,பெரிய உணவகங்களிலும் உள்ள மது பான பார்களும் ஆட்டம் கண்டு மறைந்துவிடும். மதுபான ஆலைகளுக்கு உரிமையாளர்களும் நமது அரசியல் கட்சிகளின் பெருந்தலைகள்தான். அவர்கள் மக்களிடம் மேடையில் ஒன்றைப் பேசுவது, காசு சம்பாதிக்க தங்களது சாராயத் தொழிலை வளர்ப்பது என்று இருந்தால்,அப்பாவி மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்.சசி பெருமாள் போன்ற அப்பாவி போராட்டக்காரர்கள் தான் உயிர் இழப்பார்கள்.  

 மேலும் திரைப்படங்களில்,மது குடித்துவிட்டு ஆட்டம் போடும் காட்சிகள் அறவே தடை செய்யப்படவேண்டும். மது அருந்தும் காட்சிகளை காண்பிக்காத,திரைப்படங்களுக்கே திரையிட அனுமதி வழங்க வேண்டும். அரசியல் கட்சித்தலைவர்களும்,திரைப்பட நடிகர்களும்,தாங்கள் மது குடிக்காததோடு, மற்ற பொதுமக்களையும், மதுவின் கோரப் பிடியிலிருந்து மீட்போம் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்ளவேண்டும். நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி,சத்தியம் என்று எல்லா தரப்பினரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டு தங்கள் குடும்பத்தையும்,பிள்ளைகளையும் நல் வழியில் வளர்க்க முன் வரவேண்டும். மது அரக்கனை ஒழிக்க அனைவரும் பாடுபடுவோம். நன்றி,வணக்கம்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: