Posted by: ramrajya | August 7, 2015

பாரதப் பிரதமரின் வருகையால்,தமிழகத்தில் புதிய சகாப்தம் உருவாகப் போகிறது. எஸ்.வி.ரமணி.

பாரதப் பிரதமரின் வருகையால்,தமிழகத்தில் புதிய சகாப்தம் உருவாகப் போகிறது. எஸ்.வி.ரமணி.

 பாரதப் பிரதமர் மோடி அவர்களும், மக்களின் முதல்வர் அம்மா அவர்களும்7-8-15 அன்று போயஸ் தோட்டத்தில் சந்தித்து பேசியதை அரசியலாக்க நாம் விரும்பாவிட்டாலும், தமிழக மக்கள் நலன் கருதி இருவரும் இணைந்து செயல் படுவதன் மூலம், தமிழகத்தில் பதவி சுகம் ஒன்றையே குறிக கோளாகக்கொண்டு வலம் வரும் தீய சக்திகளை, சட்டமன்ற பதவிப் படிக்கட்டுக்களை ஏற விடாமல் தடுத்து நிறுத்தி விடலாம். ஆகவே அதிமுக,பாஜக இணைந்த புதிய சகாப்தத்தையே பெரும்பாலான தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

 கைத்தறி நெசவாளர் விழவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, முதல் அமைச்சர் ஜெயலலிதாவை இன்று அவரது இல்லத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினார்.

 பிரதமர் மோடிகாலை 10.30 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தார்.  பிரதமர் நரேந்திரமோடியை தமிழக கவர்னர் கே.ரோசய்யா, முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் வரவேற்றனர்.

 பின்னர், காலை 11 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் வந்த பிரதமர் நரேந்திரமோடி அங்கு நடைபெறும் கைத்தறி நெசவாளர்கள் விழாவில் கலந்து கொண்டு பேசினார்.  நிகழ்ச்சி முடிவடைந்ததும். அங்கிருந்து காரில் புறப்பட்டு  பிரதமர் நரேந்திரமோடிபோயஸ் கார்டனில் உள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு வருகை தந்தார். போயஸ் கார்டன் வருகை தந்த பிரதமர் மோடிக்கு பொன்னாடை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் ஜெயலலிதா வரவேற்றார்.

 பின்னர் காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம்காவிரி நதி நீர் ஒழுங்கு முறை, மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண கச்சத்தீவை மீட்பது, சரக்கு சேவை வரியில் இருந்து பெட்ரோலிய பொருட்களுக்கு விலக்கு அளிப்பது, தீபகற்ப நதிகளை தேசிய மயமாக்குவது, ஜல்லிக்கட்டுக்கு விதிக்கபட்ட தடையை நீக்குவது  உள்ளிட்ட பல்வேறு தமிழக நலன்கள் அடங்கிய கோரிக்கை மனுவையும் பிரதமரிடம் ஜெயலலிதா வழங்கினார்.

இரு கட்சிகளும் ஒருவரோடு, ஒருவர் இணைந்து பணியாற்றினால். தமிழக மக்கள் வளமான வாழ்வைப் பெறுவார்கள். தமிழகத்தில் புதிய சகாப்தம் நிச்சயம் உருவாகும். நன்றி,வணக்கம்.  

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: