Posted by: ramrajya | August 15, 2015

மும்பை உயர்நீதிமன்றம் சாமியார் ராதேமாவுக்கு தற்காலிக முன் ஜாமீன் வழங்கியது.

Bombay High Court provided Radhee Maa temporary relief by granting interim pre-arrest bail.

 மும்பை உயர்நீதிமன்றம் சாமியார் ராதேமாவுக்கு தற்காலிக முன் ஜாமீன் வழங்கியது.

 மும்பையைச் சேர்ந்த பெண் சாமியார் ராதே மா. இவர் தன்னை காளியின் அவதாரமாக சொல்லிக் கொண்டு மும்பையில் உலா வந்தார். கவர்ச்சி உடையில் ஒரு கையில் சூலாயுதமும், மற்றொரு கையில் ரோஜாப்பூ என பக்தர்களுக்கு ஆசி வழங்கி பரபரப்பு ஏற்படுத்தினார். 

இந்நிலையில் அவர் மீது ஒரு பெண் மும்பை போலீசில் வரதட்சணை புகார் கொடுத்தார். இந்த நிலையில் வரதட்சணை புகார் தொடர்பாக போலீசார் பெண் சாமியார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினார்கள். இதையடுத்து போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க கோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். நேற்று அந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதையடுத்து முன்ஜாமின் கேட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் ராதே மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி மிருதுளா பட்கர், வரதட்சணை வழக்கில் ராதேவுக்கு தற்காலிக முன்ஜாமின் வழங்கினார். மேலும், அவர் வரும் 19ம் தேதியும், 26-ம்தேதியும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

 மும்பையில் ராதே மாவுக்கு ஏராளமான் பக்தர்கள் இருக்கிறார்கள். பத்திரிகைகளில் வந்த செய்தியை உங்களுக்கு சொல்லி உள்ளேன். நன்றி,வணக்கம்.

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: