Posted by: ramrajya | August 16, 2015

மதுவை மறந்து உங்கள் மக்களை வாழ வையுங்கள். எஸ்.வி.ரமணி.

Stop drinking and save your family. Tamil Spech.S.V.Ramani.

மதுவை மறந்து உங்கள் மக்களை வாழ வையுங்கள். எஸ்.வி.ரமணி.

குடும்பத் தலைவர்கள் மது அருந்தாமல் மனக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். நம்மை குடிக்க சொல்லி இந்த அரசு கட்டாயபடுத்துகிறதா? இல்லையே. பின்னர் ஏன் மது விலக்கை அமல் படுத்தபோராட்டம் நடத்த வேண்டும்.. மதுவை மறப்பதற்கான வழிகளை ஆராய்ந்து  ஒவ்வொருவரும் தங்கள் மனைவி,மக்கள் முன்னேற்றத்தில் நாட்டம் கொள்ள வேண்டும். குடும்பத் தலைவர் குடிப்பதற்காக செலவு செய்யும் பணத்தில் தங்கள் குடும்பத்தை மகிழ்ச்சியாக வாழ வைக்க முடியும். 

இந்தியாவிலேயே சராசரி நபர் அருந்தும் மதுவின் அளவு கேரளத்தில் தான் அதிகம் என்று ஒரு பத்திரிகை செய்தி கூறுகிறது. இப்போது கேரளாவில் ஐந்து ஸ்டார் ஹோட்டல்கள் தவிர மற்ற இடங்களில் மதுக்கடைகளை மூட அந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  பல காலமாக முதலிடத்தில் இருந்த பஞ்சாப் மாநிலத்தை கேரளம் பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்தது. மதுவிலக்கு தமிழ் நாட்டில் இருந்த போது குடிப் பழக்கம் குறைய வில்லை. கள்ளச் சாராய கோடீசுவரர்கள் குற்றக் கூட்டத்தினர்தான் பெருகினர். அதைப்போன்று தமிழகத்தில் மதுவிலக்கு வந்தால் பாண்டிச்சேரி போன்ற பிற மாநிலங்களை நோக்கி குடியர்கள் செல்வார்கள்.அதனால் அவர்கள் குடும்பத்தார்தான் மென்மேலும் அவதிப்படுவார்கள். ஏழை குடியர்கள் ஸ்டார் ஹோட்டல்  நோக்கி செல்ல முடியாது.   

மதுக்கடைகளை ஒழிப்பதற்கு முன்னோடியாக,மதுக் கடைகளை குடியிருப்புகள், பள்ளிகள், கோவில்கள்-மசூதிகளுக்கு அருகில் வைக்க அனுமதிக்கக் கூடாது. சமுதாயத் தலைவர்கள், பெரியோர், ஆர்வலர்கள் மதுவின் கெடுதிகள் பற்றிப் பிரசாரம் செய்யல்லாம். தாம் முன்மாதிரிகளாக இருந்து மக்களை வழி நடத்தலாம். குறிப்பாகக் குழந்தைகள், சிறார், பெற்றோர்-பெரியோர் செய்வதைத்தான் பின்பற்றுவார்கள், ஆகவே பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நல்ல அறிவுரைகளைச் சொல்லி தாங்கள் குடிப்பதையும் நிறுத்தி விட்டு பிள்ளைகளை திருத்தவேண்டும்.

டாஸ்மாக் கடைகளை மூடினால் தமிழ் நாட்டில் தாராளமாக.கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள்தான் பெருகுவார்கள். மது விற்பனை மூலம் ஒவ்வொரு ஆண்டும் ரூ.22,000 கோடி வருவாய் கிடைப்பதை தமிழக ஏழை மக்களின் நல வாழ்வுக்காகத்தான் செலவிடப்படுவதாக அரசு சொல்கிறது.  இப்போது மது விலக்கு கொண்டு வந்தால் கள்ளசாராய வியாபாரிகள்தான் அந்த ரூ 22,000  கோடியால் பயனடைவார்கள் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.

மது, சூது, களவு, பாவம் என்று முன்னோர்கள் சொன்னார்கள், ஆகவே அரசியல் கட்சிகள் ஆரம்பித்து வைத்த இந்த  தவறான கோட்பாடுகளை,நாம் படிப்படியாகத்தான் போக்க முடியும். சமூக நல ஆர்வலர்களும்,பண்புடைப் பெரியோர்களும்,சமயத் துறவிகளும், மதுவை ஒழிப்பதற்கான,ஆக்க பூர்வமான  வழி முறைகளை சிந்தித்து,அவற்றை பொதுமக்களிடமும், அரசிடமும் தகுந்த முறையில் சொல்லி மன மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.    

குடி குடியைக் கெடுக்கும் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது.

நன்றி,வணக்கம்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: