Posted by: ramrajya | December 25, 2015

வெற்றிக்கு நீ,அன்புக்கு நீ,அறிவுக்கு நீ, மக்களை காக்கும் தெய்வம் நீதான் அம்மா…! எஸ்.வி.ரமணி.

வெற்றிக்கு நீ,அன்புக்கு நீ,அறிவுக்கு நீ, மக்களை காக்கும் தெய்வம் நீதான் அம்மா…! எஸ்.வி.ரமணி.

 இயற்கை பேரிடரால் தமிழக மக்களின் துயரங்கள் தாங்கமுடியாத அளவில் உள்ளது என்பது உண்மை. ஆனால் இதைக் காரணம் காட்டி ஒரு சில ஓநாய்கள் ஆட்சியைக் கைப்பற்றலாம் என கனவு காண்பது நிறைவேறாத நிராசைக் கனவுகள். புரட்சித்தலைவியை விட ஒரு முதல்வர் நிதானம் காட்டி,மக்களின் துயரப் பணிகளில் ஆர்வம காட்டி,அவர்கள் இன்னல்களை துடைக்க முன் வந்தது சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டிய  அரிய செயல். இதனை இவன் முடிப்பான் என நன்கறிந்து,அதன் படி தன் கட்சித் தலைவர்களை,மக்களின் துயர் துடைக்கும் பணியில் ஈடு படுத்திய அவரைப் போற்றிப் புகழ வார்த்தைகள் கிடையாது. இலட்சக்கணக்கான மக்கள், வெள்ளங்களில் தவித்து, வீடு வாசலை இழந்திருக்கும்,இவ்வேளையில், அரசு செய்து கொண்டிருக்குக் இமாலயப் பணிகளில் ஒருசில குற்றங்களை கண்டுபிடித்து,அதை வைத்து தேர்தலில் வெற்றி பெறுவோமா என வழி தேடும் வீணர்கள்,நிச்சயம் அதை வைத்து எந்த வெற்றியையும் அடைய முடியாது என்பதை உணர வேண்டும். நூறு ஆண்டு வரலாறு அறியாத மழை வெள்ளத்தால் தவித்த மக்கள் நல வாழ்வுப் பணியில் எதிர் கட்சியினரும்,ஆர்வம காட்டி உழைத்தால்,ஒரு சில இடங்களிலாவது அவர்கள் வெற்றியை அடையலாம்.    

 2016 ஆம் ஆண்டு தமிழகத்தேர்தலில் மகத்தான  வெற்றி கண்டு,மக்கள் பணியில் தொடரப் போகும் முதல்வர்,மக்களின் முதல்வர் அம்மாவைத் தவிர வேறு யாரும் இருக்கமுடியாது. என்பது உலகம் அறிந்த உண்மை. நன்றி,வணக்கம்.

 வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும்

நாட்டு மக்கள் துயர் துடைத்த அன்னை நீ அல்லவோ

அன்பின் வடிவமே, கருணையின் உருவமே,

உன்னை விட்டால் மக்களுக்கு வேறு யார் உள்ளார்

தீய மனம் படைத்தோர் உன்செயலை வெறுத்தாலும்,

பிள்ளை மனம் படைத்த மக்களை கை விடாதே அம்மா,

மக்களுக்கு பஞ்சு மிட்டாய் காட்டியே

கோட்டையை பிடிக்க நினைக்கும் குருடர்கள் அவர்கள்,   

கூட்டணி அமைத்தாலும்,அவர்கள் கோட்டை வாயிலில்தான்

காவல் காக்க வேண்டும்,

வெற்றிக்கு நீ,அன்புக்கு நீ,அறிவுக்கு நீ,

மக்களை காக்கும் தெய்வம் நீதான் அம்மா…!

https://youtu.be/gyJ_wq73Eic


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: