Posted by: ramrajya | December 29, 2015

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் தெரியாதா இராமதாசுக்கு. எஸ்.வி.ரமணி.

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் தெரியாதா இராமதாசுக்கு. எஸ்.வி.ரமணி.

தமிழகத்தில் 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனித்து போட்டியிட வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறி உள்ளார். பா.ம.க.வில் உள்ளவர்கள் இதை ஏற்றுக்கொண்டாலும்,கருணாநிதி போன்றவர்கள் தனித்து நிற்பதை விரும்பவில்லை. அதுவும் கூட்டணி கட்சியினர்,ராமதாசின் மகன் முதல்வராக வருவதை ஏற்றுக் கொள்ளவேண்டுமாம். குருடனுக்கும்,கோமாளிக்கும் பேரழகியை மணம் செய்விக்க வேண்டும் என்பதைப் போல,அவரவர் தங்கள் பிள்ளைகளுக்கு அரியாசனத்தில் பங்கு வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்தால், நான்கு பரதேசிகள் அரண்மனை கட்ட ஆசை பட்ட கதையைப் போல் அல்லவா முடிந்து விடும்.  

தேர்தல்களில் பிரச்னை வராமல் இருக்க ஓட்டுக்கு பணம் தர மாட்டேன் என அரசியல் கட்சிகளிடம் முன்னதாகவே தேர்தல் ஆணையம் எழுதி வாங்க வேண்டும். மீறும் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கூறுகிறார்.தன் வீட்டுப்பிள்ளைகளை சினிமாவுக்கு போகாதே,படிப்பில் கோட்டை விட்டு விடுவாய் என்று சொல்லமுடியாதவர்கள், தேர்தல் ஆணையத்தை எப்படி பணம் தராதே என்று சொல்லச் சொல்லி கட்டுப் படுத்தமுடியும்   

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் கூட்டணி இல்லாமல் தங்கள் பலத்தை காட்ட வேண்டுமாம்,. பா.ம.க.வுடன் பா.ஜ.க.வினர் கூட்டணிக்கு வந்தால் நாங்கள் ஏற்போம். ஆனால் முதல்வர் வேட்பாளர் அன்புமணிராமதாஸ் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் சொல்லி இருக்கிறார் ராமதாஸ். தேர்தல் முடிந்தவுடன் முதல்வர் வேட்பாளர் குறித்து பேசிக் கொள்ளலாம் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்து நியாயமானது என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்,தெரியாதோடி நோக்கு என்ற சினிமாப் பாடலை ராமதாஸ் ஒருதரம் சொல்லிப் பார்த்தால் அவருக்கு உண்மை புரியும். நன்றி,வணக்கம்.  

https://youtu.be/HRNmi-SIpFE


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: