Posted by: ramrajya | January 13, 2016

மகாத்மா காந்தி அடிகளின் வெள்ளையர்களுக்கு எதிரான உப்பு சத்தியாகிரகமும்,தமிழர்களின் ஜல்லிக்கட்டும்.

மகாத்மா காந்தி அடிகளின் வெள்ளையர்களுக்கு எதிரான உப்பு சத்தியாகிரகமும்,தமிழர்களின் ஜல்லிக்கட்டும்.

6 April 1930 அன்று மகாத்மா காந்தி அடிகள் மும்பையிலிருந்த தண்டியை நோக்கி ஆயிரக்கணக்கான பொதுமக்களுடன்,உப்புக்கு வரி விதித்த வெள்ளையர்களின் சட்டத்தை எதிர்த்து நடைப்பயணம் மேற்கொண்டு கடலில் இறங்கி உப்பு எடுத்து சிறை சென்றார்..மூதறிஞர் இராஜாஜி அவர்களும்,தமிழகத்தில் தேசிய காங்கிரஸ் இயக்கத்தை சார்ந்தவர்களான டி.எஸ்.எஸ்.ராஜன்,சர்தார் வேதரத்தினம்,பெருந்தலைவர் காமராஜ்,எம்.பக்தவத்சலம்,சி.ஆர்.நரசிம்மன்,மதுரை வைத்திய நாத அய்யர் போன்றோர்களுடன் இணைந்து வேதாரண்யத்தில் உப்பு எடுக்கும்  போராட்டத்தில் கலந்து கொண்டார். இராஜாஜி திருச்சியிலிருந்து தொண்டர்களுடன் இந்த உப்பு எடுக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.

 அன்று,நமது தலைவர்கள் உப்பு போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள்,சிறை தண்டனைக்கோ,வெள்ளையர்களின் துப்பாக்கி சூட்டிற்கோ தயாராக இருக்க வேண்டும் என்று தெளிவுபடச் சொல்லி, அதற்கு சம்மதிப்பவர்களே,உப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்று முன்னதாகச் சொல்லி விட்டார்கள்.

 இன்று தமிழர்கள் வீர விளையாட்டான ஜல்லிக் கட்டிற்கு உச்ச நீதி மன்றம் விதித்த தடையை,தமிழக அரசும் மத்திய அரசும் அவசர சட்டம் கொண்டு வந்து தடையை நீக்க வேண்டும் என்று

பொங்கல்,மாட்டு பொங்கலுக்கு ஒரு சில தினங்களே இருக்கும் நிலையில்,வீர வசனம் பேசுவதை தமிழகத் தலைவர்கள் விட்டுவிட்டு,கருணாநிதி,வை.கோ.,இளங்கோவன்,இராமதாஸ்,திருமாவளவன்,ஜி,கே,வாசன் போன்றோர் அவர்கள்  தலைமையில்,தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தும்,சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாதா? தமிழக மக்களும்,இன்றைய தலைவர்களின் ஜல்லிக்கட்டிற்காக அவர்களின் தியாக உணர்வைக்கண்டு போற்றி மகிழ்வார்கள்.

நமது தலைவர்கள்,மகாத்மா காந்தி அடிகள்,இராஜாஜியின் வழியைப் பின் பற்றுவார்களா? நன்றி,வணக்கம்.

 https://youtu.be/4ddufwPI3u8


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: