Posted by: ramrajya | January 15, 2016

குடும்ப ஆட்சி மீண்டும் வந்துவிடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும். என்பது பற்றி துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி.

குடும்ப ஆட்சி மீண்டும் வந்துவிடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும். என்பது பற்றி துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி.

 தினமணி 15 January 2016  இதழில் வந்த செய்திகளை உங்களுக்கு சொகின்றேன்.

  துக்ளக் இதழின் 46-ஆவது ஆண்டு விழா, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாதெமியில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
விழாவில் சோ.ராமசாமி பேசியது: “”அதிமுக ஆட்சியில் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதேசமயம் சில நிறைகள் இருக்கின்றன.
வெள்ளத்துக்கே ஜெயலலிதாதான் காரணம் என்று சொல்ல முடியாததால், நிவாரண உதவிகள் வழங்குவதில் குறைகள் கூறுகின்றனர். ஆனால், அதிலும் போகப் போக ஒரு வரைமுறை வந்து எல்லா இடங்களிலும் திருப்திகரமான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 குடும்ப ஆட்சி போனதற்கு…:தொழில்துறை வளர்ச்சிக்கு பெரும் பணியை முதல்வர் ஜெயலலிதா ஆற்றி வருகிறார். மத்திய அரசிடம் இருந்து போராடி பெற வேண்டியதைப் பெற்று வருகின்றனர். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் சிரத்தையுடன் போராடி நீதிமன்றம் மூலம் தமிழகத்துக்குச் சாதகமான உத்தரவுகளை அதிமுக பெற்றுள்ளது.
மேலும், தமிழகத்தில் குடும்ப ஆட்சி போனதற்கு அதிமுகதான் காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது. திமுக ஆட்சியில் சினிமா, அரசியல் என அனைத்திலும் குடும்ப ஆட்சி நடைபெற்றது. மூத்த மகன், இளைய மகன், பேரன், பேத்தி என ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொருவர் அதிகாரமிக்கவர்களாக இருந்து வந்தனர். அந்த நிலை இப்போது இல்லை.அதுவே பெரிய மாற்றம். அந்தக் குடும்ப ஆட்சி மீண்டும் வந்துவிடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். 
மோடியாலேயே முடியும்: ஊழல் குற்றச்சாட்டு இல்லாத அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது. இந்தியாவில் இதுவரை எத்தனையோ பிரதமர்கள் வந்துள்ளனர். அதில் ஊழலை ஒழிப்பதில் முதன்மையானவர் மோடிதான். [தொடர்ந்து ஏன் தமிழ் உரையைக்கேளுங்கள். நன்றி,வணக்கம்.

 

https://youtu.be/bGkoF7_Ab8M


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: