Posted by: ramrajya | January 19, 2016

திமுக பொதுச்செயலாளர்,பொருளாளர்களே உஷார்…உஷார்.

திமுக பொதுச்செயலாளர்,பொருளாளர்களே உஷார்…உஷார்.

 தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது சென்னை,ஜன.18 (டி.என்.எஸ்)    அ.தி.மு.க.விலாவது, கட்-அவுட்களை, அவர்களுடைய தலைவிக்கு மட்டுமே வைப்பதோடு நிறுத்திவிடுகிறார்கள். ஆனால் நம்முடைய கட்சியிலே (தி.மு.க.) உள்ள சிலர், தங்கள் கட்-அவுட்களை, பேனர்களை, ப்ளக்ஸ் போர்டுகளை ஆங்காங்கு வைத்துக் கொள்வதில் நாட்டம் காட்டி வருவதால், அது பொதுமக்களிடம் பெருத்த வெறுப்பைத் தான் ஒட்டு மொத்த கட்சிக்கும் உண்டாக்கி விடும்.

 அதனால் தான் ஏற்கனவே ஒரு முறை தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோருடைய உருவபடங்களைத் தவிர வேறு யாருடைய உருவபடங்களையும்; தி.மு.க. நிகழ்ச்சிகளுக்காக விளம்பரச் சாதனங்களை வைக்கும்போது, விளம்பரப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று கூறப்பட்டது.

 ஆனால் அண்மைக்காலத்தில் இந்த நோக்கம் மறைந்து, நாமும் அதுபோல விளம்பரம் செய்து கொள்ளத் தொடங்குவதால், பொதுமக்களும், பொதுவாகச் சிந்திக்கக் கூடியவர்களும் நம்மையும் அ.தி.மு.க.வோடு ஒப்பிட்டுப்பார்க்கத் தொடங்கிவிடுகிறார்கள். ‘‘அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகி விடும்’’ என்ற பழமொழியை யாரும் மறந்து விடக்கூடாது. எனவே அத்தகைய போக்கினை தி.மு.க.வினர் உடனடியாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று தலைமைக் கழகத்தால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 திமுகவின் அறிக்கைப்படி தலைவர் கருணாநிதியின் கட் அவுட்டைத் தவிர வேறு யாரும் தங்கள் படங்களை விளம்பரப் படுத்திக் கொள்ளக்கூடாது என்று அறிக்கை வந்தாலும் வந்துவிடும். திமுக பொதுச்செயலாளர்,பொருளாளர்களே உஷார்…உஷார். ஆகவே திமுக தொண்டர்களே தலைவர் கருணாநிதிக்கு மட்டும் கட்-அவுட்களை, பேனர்களை, ப்ளக்ஸ் போர்டுகளையும்  வையுங்கள்,தலைவரின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்.

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: