Posted by: ramrajya | January 24, 2016

பாஜக, இந்துமதக் கோட்பாடுகளை மதிக்கும் அ.இ.அ.திமு.கவுடன் கூட்டணி வைக்கலாம். எஸ்.வி.ரமணி.

பாஜக, இந்துமதக் கோட்பாடுகளை மதிக்கும் அ.இ.அ.திமு.கவுடன் கூட்டணி வைக்கலாம். எஸ்.வி.ரமணி.

BJP can have alliance with AIADMK which is  respecting Hinduism principles.

தமிழகத்தில் 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக தலைவர் அண்ணா அவர்கள்,சுதந்திராக் கட்சித்தலைவர் ராஜாஜியுடன் கூட்டணி கண்டு, ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுவேன் என்று சொல்லி ஆட்சியை பிடித்த வரலாறு பாஜக உள்பட எல்லாத் தலைவர்களுக்கும் தெரியும். சுயமரியாதைக்கொள்கையும்,ஆன்மீகக் கொள்கையும் கொண்டவர்கள் பொது நலத்திற்காக ஒன்று சேர்ந்தபோது,இந்துமதக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட அதிமுகவும்,பாஜகவும் ஊழலுக்கு உரம் போட்டு வளர்த்த திமுகவை எதிர்த்து போட்டியிடுவதை அனைத்து மக்களும் நிச்சயம் வரவேற்பார்கள். காங்கிரஸ் கட்சி அன்றே படுத்து விட்டது. இப்பொழுதும் குஷ்பு,நக்மா போன்ற நடிகைகளை நம்பிக்கொண்டிருக்கின்றது. இதனால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. திரு வைகோவும்  வாஜ்பாய் அவர்களால் பாராட்டப் பெற்றவர். அவரும் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்து பாஜகவுடன் இணைந்து தேர்தலில் செயல் படலாம்.  

அண்ணா வழி ஒற்றிநடக்கும் ஜெயலலிதா அவர்கள்,தமிழகமக்களின் நன்மைக்காகவும், தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காகவும்,உன்னதத் தலைவர் திரு.மோடி அவர்களின் கரங்களை வலிவூட்ட பாஜகவையும் தனதுதேர்தல் கூட்டணியில் இணைத்துக் கொண்டு,அவர்களுக்கும் கணிசமான தொகுதிகளை வழங்கி கௌரவிக்கலாம். 

 படுத்துக் கொண்டே ஜெயிப்பேன் என்று நம்பிக்கையுடன் சொல்லிய காமராஜர் விருது நகர் தொகுதி மக்களால் தோற்கடிக்கப்பட்டதை நம் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது.தமிழக மக்களின் நன்மைக்காக ஒரு சில பிடிவாதங்களை தமிழக கட்சியினரும் விட்டுக் கொடுக்கவேண்டும். நானும் அறுபது ஆண்டுகால தமிழக அரசியலை பார்த்து அன்று போல் இன்றும் சாமானியனாக  இருக்கும் ஒரு முதியவன்.

 ஆட்சிக்கு வருபவர் ஒவ்வொருவரும் ஊழலை ஒழிப்போம் என்று சொல்கிறார்கள்,ஊழலை ஒழித்தார்களா?என்பதை அவர்கள் மன சாட்சிதான் சொல்லவேண்டும். ஊழலை அரசியல்வாதிகள்  ஒழிக்கவிட்டால்,ஊழலே அவர்களை அழித்துவிடும். இதை உணர்ந்து,மக்களின் நல்வாழ்வையே நோக்கமாகக் கொண்டு,அனைத்துக் கட்சியினரும் தேர்தலில் நிற்கவேண்டும். நன்றி,வணக்கம்.  

 https://youtu.be/D00Ygri1N2g


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: