Posted by: ramrajya | January 25, 2016

மதுவிலக்கை முன்வைத்து, கலைஞருக்கும் – டாக்டர் ராமதாசுக்கும் –ஸ்டாலினுக்கும் – அன்புமணிக்கும் நீயா?நானா? போட்டி…?!!! எஸ்.வி.ரமணி.

மதுவிலக்கை முன்வைத்து, கலைஞருக்கும் டாக்டர் ராமதாசுக்கும் ஸ்டாலினுக்கும் அன்புமணிக்கும் நீயா?நானா? போட்டி…?!!! எஸ்.வி.ரமணி.

 பா.ம.க.தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறும்போது,கருணாநிதி தமது அறிக்கையின் முதல் பகுதியில் அனைத்துத்
தரப்பினரும் மனம் போன போக்கில் மது அருந்தி நூற்றுக்கணக்கில்
உயிர்ப்பலி ஆவதாகவும், பெண்களும் பச்சிளம் குழந்தைகளும்
மதுவுக்கு பலி ஆவதாகவும் கூறியிருக்கிறார்.

கருணாநிதியின் அறிக்கையை படிக்கும்போது, அதன் ஒவ்வொரு வரியும் பாவ மன்னிப்பு கோருபவரின் மனதிலிருந்து எழும் வார்த்தைகளாகவே என காதில் விழுந்தன. காரணம் 1948 ஆம் ஆண்டிலிருந்து 23 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைமுறையிலிருந்த முழு மதுவிலக்கை 1971 ஆம் ஆண்டு கருணாநிதி ரத்து செய்தது தான் தமிழகத்தின் இன்றைய அவல நிலைக்கு
காரணமாகும்.மதுவிலக்கின் தேவை குறித்து கருணாநிதி இப்போது பேசும்போது,1971 ஆம் ஆண்டில் மதுவிலக்கை ரத்து செய்ய கருணாநிதி முடிவு
செய்தது, அதையறிந்து துடித்து போன ராஜாஜி கொட்டும் மழையில் குடைபிடித்து வந்து கருணாநிதியை சந்தித்து மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தியது,
ஆனால், அதை ஏற்காத கருணாநிதி, “ராஜாஜி ஒரு பரிந்துரைக்காகத் தான் என்னை சந்தித்தார்என்று கூறி

அவரை எள்ளி நகையாடிவிட்டு மதுவிலக்கை ரத்து செய்தது உள்ளிட்டவை என் நினைவுக்கு வந்து செல்கின்றன.

 மது என்றால் என்னவென்றே தெரியாமல் ஒரு தலைமுறை

வளர்ந்த நிலையில், அவர்களை மதுவலையில் வீழ்த்தி சிதைத்த

பாவம் கருணாநிதியையே சாரும் என்பதை எவராலும்

மறுக்க முடியாது.

தொடர்ந்து என் தமிழ் உரையைக்கேளுங்கள். நன்றி,வணக்கம்.

https://youtu.be/VQ0Bsh0dGrI


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: