Posted by: ramrajya | January 26, 2016

தேர்தல் வெற்றிக்காக கோயில்,கோயிலாக ஏறி இறங்குகிறார்கள் பகுத்தறிவு அரசியல் வாதிகளின் குடும்பங்கள்.

தேர்தல் வெற்றிக்காக கோயில்,கோயிலாக ஏறி இறங்குகிறார்கள் பகுத்தறிவு அரசியல் வாதிகளின் குடும்பங்கள்.

 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தங்க விமான கும்பாபிஷேக விழாவில் ஜெயலிதா அவர்களின் தோழி சசிகலாவும், அவரது உறவினர் பிரபாவதியும் கலந்து கொண்டனர். திமுக வெற்றி பெற மு.க.ஸ்டாலின் ,மனைவி  துர்கா,தை மாத  பௌர்ணமி இரவு காமாட்சி அம்மன் கோயில் நள்ளிரவு பூஜை நடத்தி உள்ளார்.துர்காவின் தாயார்,தங்கையும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.தைப்பூச தினத்தன்று தருமபுரி, குமாரசாமி பேட்டை,சிவசுப்ரமணிய சாமி கோயிலில் அதிகாலை,  கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனும்,எம்..ஜி.ஆர்.மன்ற மாவட்ட செயலர் ராஜேந்திரனும் கலந்து கொண்டனர், இதே கோயிலில் பா.ம.க. அன்புமணி அவர்களின் மனைவி சவுமியா பங்கேற்று,தன் கணவரின் வெற்றிக்கு பிரார்த்தனை செய்தார். எப்படியோ தேர்தல் அறிவிப்பு மூலம்,பகுத்தரிவுவாதிகளின் குடும்பத்தார் மூலமாக கடவுள் பக்தி வளர்வதை நாம் வரவேற்கத்தான் வேண்டும். பகுத்தறிவுச் செம்மல் வீரமணி போன்றவர்கள் வாய் மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கவேண்டும்.

 கருணாநிதி அவர்களின் மருமகள் கோயில்,கோயிலாகச்செல்ல,கருணாநிதி தன் வெத்து வீராப்பை விட்டு,  விட்டு, எந்த கட்சியினர் வேண்டுமானாலும் தன்னுடன் கூட்டணி வைக்கலாம் என்று கீழ் இறங்கி வந்து விட்டார். அவரைக் கேட்டால் ஊழலை ஒழிக்க எந்தக்கட்சியுடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்பேன் என்று சவால் விடுவார், வீராணம் ஊழலில் இருந்து 2G அலைக்கற்றை ஊழல்வரை கசடக் கற்றுத்தேர்ந்த கருணாநிதியின் நிலை இன்று பரிதாபமாக உள்ளது. குஷ்பூவையும்,நக்மாவையும் வைத்துக்கொண்டு எப்படி தேர்தலில் இறங்குவது என்று திக்கு முக்காடும் இளங்கோவனுக்கு,கருணாநிதியின் திமுகவை விட்டால் வேறு கதி இல்லை.தேர்தலுக்கு பிறகு உன்னால் நான் கெட்டேன்,என்னால் நீ கெட்டாய் என்று சொல்லிக் கொள்ளலாம்.

 அதிமுக நிச்சயம் தேர்தலில் பெரும்பான்மை பெறும் என்றாலும்,மத்தியில் உள்ள பெருந்தலைவர் மோடியின் துணையை நாடுவதே ராஜ தந்திரமாகும். தமிழக மக்களின் நலனைக் கருதியும், வளர்ச்சியைக் கருதியும் இறைவன் துணையை விட மோடியின் துணையே சாலச் சிறந்ததாகும். நன்றி,வணக்கம்.

 https://youtu.be/Za_qiQkbgVQ


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: