Posted by: ramrajya | January 29, 2016

ஐயகோ திமுகவின் பரிதாப நிலை..! சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுக்க 200 பேர்களே முன் வந்துள்ளனர்.

ஐயகோ திமுகவின் பரிதாப நிலை..! சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுக்க 200 பேர்களே முன் வந்துள்ளனர்.

 வீரம் பேசும்,திமுகவின் பரிதாப நிலை பற்றி,பத்திரிகைகளில் வந்த செய்திகளை உங்களுக்கு சொல்லுகின்றேன்.

 சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட்கேட்டு அ.தி.மு.க.,வில் குவியும் மனுக்களால், தி.மு.க., திகைப்பு அடைந்துள்ளது; இதுவரை 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். தி.மு.க.,வில் வெறும் 200 பேர் மட்டுமே விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

 கடந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் 40 தொகுதிகளில் போட்டியிட 4,537 பேர் விருப்ப மனு கொடுத்தனர். அதன்மூலம் கட்சிக்கு 11.35 கோடி ரூபாய் கிடைத்தது. அப்போது ஜெயலலிதா பெயரில் மட்டும் 1,175 பேர் மனு கொடுத்தனர்.தற்போது சட்டசபை தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் ஜன., 20ம் தேதி முதல் பெறப்படுகின்றன.

 துவக்க நாளில் இருந்தே விருப்ப மனு கொடுக்க

வந்த கூட்டத்தால் அ.தி.மு.க., தலைமை அலுவலகம் களை கட்டியது. சீட்கேட்டு மனு கொடுக்கும் ஒவ்வொருவரும் முதலில் முதல்வர் போட்டியிட மனு கொடுத்த பின்னரே, தனக்கு பணம் கட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

 

இதனால் ஒன்பதாம் நாளான நேற்றும் கட்சி அலுவலகம் நிரம்பிவழிந்தது. விண்ணப்பம் வாங்க கட்சி நிர்வாகிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

 நேற்று மாலை 4:00 மணி நிலவரப்படி விருப்ப மனுக்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தொட்டது; இதன்மூலம் கட்சிக்கு 14.30 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இன்னும் ஆறு நாட்கள் உள்ளதால் விருப்ப மனு விற்பனை 20 ஆயிரத்தை தொடும்; 22 கோடி ரூபாய் வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல தி.மு.க.,வில் விருப்ப மனு 24ம் தேதி முதல் வாங்கப்படுகிறது. நேற்று வரை 200 விண்ணப்பங்கள் மட்டுமே கட்சியினரால் வாங்கப்பட்டு உள்ளன. சீட்கேட்பதில் அ.தி.மு.க., வினர் இடையே காணப்படும் உற்சாகமும்,வரவேற்பும் திமுகவை திகைப்படையச் செய்துள்ளன.

 என்ன செய்யப்போகிறார் கருணாநிதி, யார் வேண்டுமானாலும் தன்னுடன் கூட்டணி வைக்கலாம் என்று ஆலோலம் பாடிய கருணாநிதி, டூ ஜி அலைக்கற்றையில் இரு நூறு கோடி வாங்கிய கடனை கட்சிக்காரர்களிடம் கொடுத்து விருப்பமனு கொடுக்கச்சொல்லி, தன்  சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ளப்போகிறாரா? பொறுத்திருந்து பார்ப்போம். நன்றி,வணக்கம்.

 https://youtu.be/C5Utcy4T5l8


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: