Posted by: ramrajya | January 31, 2016

கருணாநிதி பிறரை குற்றம் சாட்டுவதை விட, அவரால் பழிவாங்கப்பட்டவர்கள் பட்டியலை பார்க்கவேண்டும்.

கருணாநிதி பிறரை குற்றம் சாட்டுவதை விட, அவரால் பழிவாங்கப்பட்டவர்கள் பட்டியலை பார்க்கவேண்டும்.

 பழ.கருப்பையாவின் வீடும்,காரும தாக்கப்பட்டது தவறுதான்.ஆனால் திராவிட இயக்கத்தினரால் கடந்த காலங்களில்  தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காமல் உள்ளது. அதற்கெல்லாம் கருணாநிதியால் பதில் சொல்லமுடியுமா?சென்னையில் இரண்டு இடங்களில் கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுக்கப்பட்டு, தாக்கப்பட்டனர். சென்னை மைலாப்பூர் முண்டக்கண்ணியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் விஸ்வநாத குருக்கள் என்பவர் இரவு தனியாக நடந்து வந்து கொண்டிருந்தபோது, மோட்டர் சைக்கிள்களில் வந்த சிலர், திடீரென அவரைத் தாக்கி, அவரது பூணூலை அறுத்தார்கள். 76 வயதாகும் விஸ்வநாதன் காரணீஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்துவருகிறார்.

இந்த சம்பவம் நடந்து சிறிது நேரம் கழித்து, மேற்கு மாம்பலத்தில் வசிக்கும் சந்தான கோபாலன் என்ற 69 வயது முதியவர் ஒருவரும் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவங்கள் தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் முதலில் கைது செய்யப்பட்டனர்.

ம.பொ.சி. 1953 ஆம் ஆண்டு மாயவரத்தில் திராவிட இயக்கத்தினரால் தாக்கப்பட்டார். மதுரையில் இந்திராகாந்தி அவர்கள் திராவிட இயக்கத்தினரால் தாக்கப்பட்டார்.பா.ஜ.கவின்

தமிழக பா.ஜ.க.வின் பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் அவர்கள் சேலத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவரைப்போன்ற பல பாஜகவினர் திராவிட இயக்கத்தினரால் தாக்கப்பட்டுள்ளனர். 

 1980 முதல் 2006 வரை நடந்துள்ள தாக்குதல்: 1980களில் தி இந்துநிருபர் கணபதி என்பவர் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த போது திகவினர் அவரை நிறுத்தி, சட்டை-பனியனைக் கிழித்து, பூணூலை அறுத்தனர். 1983ம் ஆண்டு ஆலய மறியல் போராட்டம் என திராவிடர் கழகம் ஸ்ரீரங்கத்தில் அறிவித்திருந்தது. ஆலயப் பிரகாரத்தில் அப்பிராணியாய் கிடந்த ஒரு நோஞ்சான் கிழவரின் பூணலை அறுத்து மூக்கை உடைத்து விட்டு தப்பி ஓடியது. சென்னையில், பழைய மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

 சென்னையில் திமுகவின் ஆட்சியின் போது நடைபெற்ற நகராட்சி தேர்தலில்,நடைபெற்ற அட்டூழியங்களைக் கண்டு ஓட்டுப்போடவே மக்கள் வரப பயந்ததை அனைவரும் அறிவார்கள்.

 ஏப்ரல் 1929 அம்பேத்கர் முன்னிலையில் வேதகோஷங்களோடு 6,000 பேருக்கு பூணூல் அணிவிக்கப்படலும், இப்போது அம்பேத்கர் பெயரில் பெரியார் தொண்டர்கள் பூணூல்-அறுப்பு தாக்குதலில் ஈடுபட்டதும் நியாயம் தானா?

 அதிமுக ஆட்சியில் உதை வாங்கியவர்களின் பட்டியலை    வெளியிடும் கருணாநிதி, திமுக ஆட்சியில் அவர்களால்  அடிவாங்கியவர்களின் பட்டியலை வெளியிடுவாரா?

 அரசியலில் அன்பை வளர்க்கவேண்டும்,தலைவர்கள் தங்கள் பதவி ஆசைக்காக தொண்டர்களை பலிகடா ஆக்கி,பழிவாங்கும் மனப்பான்மையை வளர்க்கக் கூடாது.

 கருணாநிதி பிறரை குற்றம் சாட்டுவதை விட, அவரால் பழிவாங்கப்பட்டவர்கள்  பட்டியலை பார்க்கவேண்டும்.

நன்றி,வணக்கம். https://youtu.be/MmDe86XWuxI

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: