Posted by: ramrajya | February 11, 2016

நானே ராஜா…! கருணாநிதி. வம்பன்.

நானே ராஜா…! கருணாநிதி. வம்பன்.

தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தானே தேர்வு செய்ய உள்ளதாக, கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலரிடம், கருணாநிதி கூறியிருப்பது, ஸ்டாலின் ஆதரவாளர்களை கலக்கம் அடையச் செய்துள்ளது.இதுதொடர்பாக, பத்திரிக்கை செய்திகளை உங்களுக்கு சொல்லுகின்றேன்.

தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:தமிழகம் முழுவதும், ‘நமக்கு நாமே’ பயணத்தை நடத்தி வரும் ஸ்டாலின், ஆரம்பத்தில், ‘தி.மு.க.,வின் முதல்வர் வேட்பாளர் கருணாநிதியே’ என, கூறி வந்தார். ஆனால், இப்போது, ‘கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை, தலைவர் கருணாநிதி முடிவு செய்வார்’ என, கூற ஆரம்பித்துள்ளார். இதனால், கருணாநிதி கோபம் அடைந்துள்ளார். அதற்கேற்றார்போல,

கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் அவரைச் சந்தித்துப் பேசியபோது, ஸ்டாலினின் மாறுபட்ட பேச்சுக்களை பற்றி எடுத்துக்கூறி,அவரின் கோபத்தை மேலும் துாண்டியுள்ளனர். எனவே, சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களைத்தானே தேர்வு செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

‘கடந்த லோக்சபா தேர்தலின் போது, தி.மு.க., சார்பில் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் பலர் சரியில்லாதவர்களாக இருந்தனர். அதுவும், கட்சியின் தோல்விக்கு காரணமாகி விட்டது’ என்றும், அதற்கு கருணாநிதி காரணம் கூறியுள்ளார்.இதனால், ஸ்டாலின் மற்றும் அவரின் ஆதரவாளர்களைப் பிடித்து, தேர்தலில் போட்டியிட, எப்படியும், ‘சீட்’ வாங்கி விடலாம் என்ற கனவில் உள்ள பலர், அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து என் உரையைக் கேளுங்கள்.நன்றி,வணக்கம்.

https://youtu.be/dnQ07Ks3S9E


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: