Posted by: ramrajya | February 12, 2016

இந்து என்றால் திருடன் என்று விமர்சனம் செய்த கருணாநிதியுடன் இணைவது பிஜேபி கட்சிக்கு தலைகுனிவை உண்டாக்கும்.

இந்து என்றால் திருடன் என்று விமர்சனம் செய்த கருணாநிதியுடன் இணைவது பிஜேபி கட்சிக்கு தலைகுனிவை உண்டாக்கும்.  

 பா.ஜ.க. தமிழகத்தின் இரண்டு திராவிடக் கட்சிகளுடன் முன்பு கூட்டணி அமைத்திருக்கிறது. பாரதிய ஜனதாவை மதவாதக் கட்சி என்று ஒதுக்கி ஓரம்போனவர்களில் திமுக மட்டும் மத்திய அமைச்சர் பதவியையும் ருசி பார்த்து பலனை அனுபவித்த பின் ஒதுங்கிக் கொண்டதோடு மட்டுமல்ல பா.ஜ.கவை, பாஜக முகமூடியுடன் தமிழகத்தில் காலடி பதிக்க நினைக்கும் மதவெறியர்கள் என்று கோஷம் எழுப்பியது.

 இன்று தன் கட்சியிலும் இந்துமதக் கொள்கை உள்ளவர்கள் பல்லாயிரம் பேர் உள்ளனர் என்று கூறுவதோடு மட்டுமல்ல.ஸ்டாலினும்,அவர் குடும்பத்தாரும் கோவில்,கோவிலாக சாமி கும்பிட்டு வருகின்றனர். சுபரமணி சாமியையும் சேர்த்து.

 என்னைப் பொறுத்தவரையில்,திமுக்,பாஜக கூட்டணி அமைத்தாலும்,அது எலியும் பூனையும் கதையாகத்தான் முடியும். கொள்கை பிடிப்பு இல்லாதவர்கள், ஒன்று சேர்ந்து ஒரு பயனும் கிடையாது.

 இந்நிலையில் ‘‘மு.க.ஸ்டாலின் திமுக தலைவரானால் திமுக – தேமுதிக- பாஜக கூட்டணி ஏற்படும்’’ என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு திமுக, பாஜக தரப்பில் மறுப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் கூட் டணி அமைப்பதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபடுவதும்,தேர்தல் முடிந்ததும் தேன் நிலவு முடிந்து விட்டது என்று பிரிந்து செல்வதும் கேவலமாக உள்ளது.

 இந்திய மக்கள்,இந்து கலாச்சாரம் என்று விடாப்பிடியாக வாழ்ந்து வரும்,ஒப்பற்ற தலைவர் மோடியை பாரதப்பிரதமராக ஏற்றுக்கொண்டுள்ள பிஜேபி ,இந்துக்கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ளும் அதிமுக போன்ற கட்சியுடனேயே கூட்டணி அமைப்பது சாலச்சிறந்தது. பாஜகவில் உள்ள ஒரு சில தலைவர்கள்,பாஜக,காங்கிரசுடன் கூட்டணி அமைக்கலாம் என்று  சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியாதோ அதைப் போன்றதுதான்,இந்துக்களை திருடன் என்று வர்ணித்த கருணாநிதியின் கட்சி.

இந்துக்கடவுள்களையும்,இந்து மதத்தாரையும் தன் வாழ்நாள் பூராவும் கேவலப்படுத்தி  வந்த கருணாநிதி இன்று புனிதராக மாறினால்ஏற்றுக் கொள்ளமுடியுமா? பாஜகவின் தலைவர்கள் சிந்திக்கவேண்டும்,தேர்தல் வரும்,போகும் ஆனால் அடிப்படை இந்தியக் கலாச்சாரக்  கொள்கைகளை யாருக்கும் விட்டுக் கொடுத்து கிடைக்கும் பதவி வேண்டாம்.

இந்து என்றால் திருடன் என்று விமர்சனம் செய்த கருணாநிதியுடன் இணைவது பிஜேபி கட்சிக்கும்,ஒப்பற்றத் தலைவர் மோடிக்கும் தலைகுனிவை உண்டாக்கும்.

நன்றி,வணக்கம்.  https://youtu.be/zwq8RyeCZps


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: