Posted by: ramrajya | February 15, 2016

பிள்ளை பாசத்தைப் பற்றி விலா புடைக்க பேசிய கருணாநிதி,இப்பொழுது தன் மூத்த மகன் அழகிரியை நம்பாதீர்கள் என்கிறார். வம்பன்.

பிள்ளை பாசத்தைப் பற்றி விலா புடைக்க பேசிய கருணாநிதி,இப்பொழுது தன் மூத்த  மகன் அழகிரியை நம்பாதீர்கள் என்கிறார். வம்பன்.

2011 சட்டசபைத் தேர்தலில் திமுகவில் மு.க.அழகிரி முக்கிய இடம் வகித்தார். டெல்லியில் காங்கிரஸ் தலைமையுடன் பேச்சு நடத்திய குழுவில் அழகிரிதான் முக்கிய இடம் வகித்தார். இந்த நிலையில் மு.க.அழகிரி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் அடங்கிய குழுதான் காங்கிரஸ் மேலிடத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வந்தது. காங்கிரஸுக்கு இறுதியாக 63 தொகுதிகளைத் தரலாம் என்ற முடிவையும் அழகிரி தலைமையிலான குழுதான் சோனியா காந்தியை நேரில் சந்தித்துத் தெரிவித்து பிரச்சினைக்கும் தீர்வு கண்டது.

 இப்போது திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு கொள்கை கிடையாது. இந்தக் கட்சிகள் இணைந்து அமைத்துள்ள கூட்டணி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறாது, தோல்வியைத் தழுவும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி கூறியுள்ளார்.

 தற்போது,திமுகவுக்கும், அழகிரிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவர் செய்து வரும் துரோகத்திற்கு என் பெயரைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ள, அவர், அழகிரியை அலட்சியப்படுத்துங்கள் என்று திமுகவினரை கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுகவின் கட்டுப்பாட்டை மீறும் வகையில் நடந்து கொண்டதற்காக, கட்சியினால் ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கும் மு.க. அழகிரி, அவ்வப்போது கழகத்தின் வளர்ச்சியைக் கெடுக்கும் வகையிலும், கழகத்தின் எழுச்சியைக் குலைப்பதற்காகவும் வேண்டுமென்றே திட்டமிட்டு அறிக்கை வெளியிட்டும், பேட்டி கொடுத்தும் வருகிறார்.

யாரைத்தான் நம்புவதோ,மக்கள் நெஞ்சம். பிள்ளை,தந்தை பாசம் எப்படி இருக்கிறது  பார்த்தீர்களா? நன்றி,வணக்கம்.

என் உரையை தொடர்ந்து கேளுங்கள். https://youtu.be/oXmXKYUVtYM


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: