Posted by: ramrajya | February 16, 2016

தொண்டர்களாகிய நாமே நல வழி காட்டினால்,தலைவர்களும் பின் பற்றுவார்கள் என்பது என் எண்ணம.எஸ்.வி.ரமணி.

தொண்டர்களாகிய நாமே நல வழி காட்டினால்,தலைவர்களும் பின் பற்றுவார்கள் என்பது என் எண்ணம.எஸ்.வி.ரமணி.

 அதிமுகவும்,பாஜகவும் கைகோர்த்து நின்று மக்கள் நலப்பணிகளுக்காக தமிழகத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி காண வேண்டும் என்று நான் எழுதியதன் நோக்கம் பற்றி சிறுது பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.பாஜகவுடன் கூட்டணி அமைக்க தகுதி உள்ள தமிழக கட்சி எது என்று பாஜக தொண்டர்கள் சிந்தித்துப் பார்த்து நல்ல முடிவைச் சொன்னால் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.

 தமிழகத்தில் உள்ள எல்லாக் கட்சிகள் மீதும்,ஒரு கறை படிந்திருப்பது அனைவருக்கும் தெரியும்.இந்த நிலையில் தமிழகத்தில்,பாஜக பத்து தொகுதிகளிலாவது கால பதிக்க வேண்டும்.நாமிங்கு கால பதித்து,நேர்மையான முறையில் மக்களுக்கு உழைத்தால்தான் மற்றவர்களுக்கு பாடமாக விளங்க முடியும் நாமும் வளர முடியும். நாம் தனித்து நின்று வெற்றி பெறுவது என்பது,ஒரு,இரு இடங்களில் மட்டுமே முடியும். பாஜகவிற்கு மதவாதகட்சி என்ற அவப்பெயரை,பாஜகவிடம் சலுகைகள் பல பெற்ற கருணாநிதியால் நாடு பூராவும் பரப்பப்பட்டுள்ளது. இந்த அவப்பெயரை முதலில் துடைத்து எறியவேண்டும். மற்ற தமிழக உதிரிக்கட்சிகள், கொள்கை எதுவுமில்லாமல்,பதவியைப் பெறுவதையே நோக்கமாக  கொண்டுள்ளன.

 மற்றவர்களைப்பற்றி நமக்கு கவலை இல்லை.பாஜகவின் கொள்கைகளை தமிழகமெங்கும் பரப்பி, நாமும் தமிழகத்தில் வளர,பாஜக பத்து தொகுதிகளிலாவது வெற்றி பெறவேண்டும் என்பதே முதல் படி.. மக்கள் பாஜகவை அடையாளம் காண,பாஜக என்னும் பூச்செடி  தமிழக தோட்டத்தில் பசுமையுடன் வளர ஒரு கொடிக்கொம்பு தேவைஇரண்டாவது படி. அந்த கொம்பு,உறுதி உள்ளதாக இருப்பதோடு, பிற செடிகளையும் வளர நிலைத்து நிற்கவேண்டும் மூன்றாவது படி.பாஜக பூஞ்செடி செழித்து வளர எந்த கொடிக்கம்பு உறுதி உள்ளதாக இருக்கும் என்பதை,தொட்டக்காரர்களாகிய தொண்டர்கள்தான் முடிவு செய்யவேண்டும்.அது நான்காவது படி.

 எப்படி செடி வளர கொடிக்கம்பு தேவையோ,அதைப்போல் கட்சிவளர தமிழகத்தில் உள்ள கட்சிகளில் எது சிறப்புடையதோ அதன் துணை தேவை.

நான் பாஜகவின் வளர்ச்சிக்காக,அதிமுகவின் துணையை நாடலாம் என்று எழுதினேன். நான் உங்கள்,தந்தை, தாத்தாவின் வயது உடையவன்.அரசியல் விளையாட்டுகளை பல ஆண்டு களாக பார்த்து வருபவன்.

 இன்று என்  பிள்ளைகள் தர்மத்தின் துணையுடன்,வளர நினைக்கும்  பாஜகவின் வளர்ச்சிக்காக எந்த நல வழியைக் காட்டினாலும் ஏற்றுக்கொள்ள நானும்  தயாராக உள்ளேன். எல்லோருடைய குறை,நிறைவுகளும் எல்லோருக்கும் தெரிகிறது.ஆனால் பிறர்  மீது பழி போடுவதை விட, தொண்டர்களாகிய நாமே நல வழி காட்டினால்,தலைவர்களும்  பின் பற்றுவார்கள் என்பது என் எண்ணம.  எவ்வழி,நல்வழியோ அது நம் வழியாக இருக்கட்டும். நன்றி,வணக்கம். https://youtu.be/8NTBADvap3A


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: