Posted by: ramrajya | February 17, 2016

மைலாப்பூர் தொகுதி குஷ்புவுக்கா?நக்மாவுக்கா?வெல்லப்போவது பாஜகதான்.எஸ்.வி.ரமணி.

மைலாப்பூர் தொகுதி குஷ்புவுக்கா?நக்மாவுக்கா?வெல்லப்போவது பாஜகதான்.எஸ்.வி.ரமணி.

 மயிலாப்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட குஷ்புவும், நக்மாவும் மல்லுக்கட்டுவதால், காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு உருவாகி உள்ளது. பத்திரிக்கைச் செய்தியைக் கேளுங்கள்.சென்னை மயிலாப்பூர் தொகுதியை, கூட்டணி கட்சிக்கு விட்டுக் கொடுப்பதையே, தி.மு.க., வழக்கமாகக் கொண்டுள்ளது. அதனால், தி.மு.க., கூட்டணியில் தற்போது காங்கிரஸ் இணைந்துள்ளதால், அந்தத் தொகுதி, காங்கிரசுக்கே விட்டுக் கொடுக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்தத் தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட அகில இந்திய காங்., செய்தி தொடர்பாளர் குஷ்பு விரும்புகிறார். குஷ்புவுக்காக, அவரது ஆதரவாளர் மயிலை அசோக் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். 

குஷ்புவின் வீடு சாந்தோமில் உள்ளது. தான் வசிக்கும் தொகுதி என்பதாலும், வெள்ளம் பாதித்த நேரத்தில், மீனவர்கள் மற்றும் குடிசை பகுதி மக்களுக்கு, தன் சொந்த செலவில் நலத்திட்ட உதவிகளை குஷ்பு வழங்கியதாலும், அவர் போட்டியிட்டால், வெற்றி வாய்ப்பு சாதகமாக இருக்கும் என, அவரின் ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். 

அதேநேரத்தில், குஷ்புக்கு போட்டியாக, கட்சியின் மகளிர் அணி பொது செயலர் நக்மாவும், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட விரும்புவதால், காங்கிரசில் பரபரப்பு உருவாகி உள்ளது. 

 

குஷ்புவுக்கு முன் 2009 இல் நக்மா காங்கிரசில் சேர்ந்துள்ளார். தி.மு.கவில் இருந்த குஷ்பு, சமீபத்தில் தான் காங்கிரசுக்கு வந்தார். இதனால், இருவருக்கும் இடையே சீனியர், ஜூனியர் பிரச்னை தலைதுாக்கி உள்ளது. சீனியர் என்றபோதிலும் நக்மாவுக்கு இப்போது தான் கட்சி பொறுப்பு கிடைத்துள்ளது. ஆனால், குஷ்பு கட்சியில் சேர்ந்ததும் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது. அதனால், தனக்கென தனி கோஷ்டியை குஷ்பு உருவாக்கி வருகிறார்..ஆனால் நமது கணிப்புப்படி

மைலாப்பூர் தொகுதியில் வெல்லப்போவது பாஜக கட்சிதான். பொறுத்திருந்து பாருங்கள். நன்றி,வணக்கம். https://youtu.be/G5FShF7JBZk


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: