Posted by: ramrajya | February 21, 2016

மந்திரி பதவியை மாசு படுத்திய ரமணாவுக்கு தகுந்த தண்டனை அளித்தார் அம்மா.எஸ்.வி.ரமணி.

 மந்திரி பதவியை மாசு படுத்திய ரமணாவுக்கு  தகுந்த தண்டனை அளித்தார் அம்மா.எஸ்.வி.ரமணி.

 அந்தரங்கம் படம் வெளியான விவகாரத்தில், பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து ரமணா நீக்கப்பட்டுள்ளார். ரமணாவிடம் இருந்த பால்வள துறை, ஊரக தொழில் துறை அமைச்சர் ப.மோகனிடம், கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரமணா வகித்த கட்சியின் மாவட்ட செயலர் பொறுப்பு, உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ.,வும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலருமான வாலாஜாபாத் கணேசனிடம், கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

 சில தினங்களுக்கு முன், அமைச்சர் ரமணா, படுக்கை அறையில், ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போலவும், அந்த பெண் அவருக்கு முத்தம் கொடுப்பது போலவும், ‘வாட்ஸ் ஆப்மற்றும், ‘பேஸ் புக்கில் படங்கள் வெளியாகின. விரைவில், சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் சூழலில், அமைச்சர் ஒருவரின் அந்தரங்க படம் வெளியாகி இருப்பது, அ.தி.மு.க.,வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலையில், ‘புகைப்படங்களை வெளியிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என, அமைச்சர் ரமணா, தன் உதவியாளர் மூலம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

 கிடைத்த தகவல்கள் குறித்து, உளவுப் பிரிவு போலீசார் கூறியதாவது:அந்தரங்க படங்கள், மொபைல் போன் மூலம் வெளியாகி இருப்பதால், அதை தொழில் நுட்ப உதவியுடன், சைபர் கிரைம்போலீசார் விசாரித்து வருகின்றனர். விரைவில், அவர்கள் குற்றவாளிகளை பிடித்து விடுவர். அதற்கு முன், அரசுக்கு சில விவரங்களை நாங்கள் திரட்டி கொடுத்துள்ளோம். அதில், அதிர்ச்சிகரமான தகவல்கள் உள்ளன.

 அமைச்சர் ரமணாவுக்கு, ஏற்கனவே பெண்களுடன் பிரச்னைகள் உள்ளன. முதல் மனைவி லலிதா என்பவர், நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனுவை, ரமணா மிகவும் சிரமப்பட்டு தான், ‘பைசல்செய்துள்ளார். இருந்தாலும், லலிதாவின் பின்னணியில் இருந்து ரமணாவுக்கு எதிராக பல, ‘சக்திகள் இயங்குகின்றன.

 தற்போது வெளியான அந்தரங்க படத்தில் இருப்பது ரமணாவின், இரண்டாவது மனைவி லதா. அவரது பின்னணியில் இருந்தும் சிலர் இயக்கி இருக்கக்கூடும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. [தொடர்ந்து என் தமிழ் உரையைக் கேளுங்கள்.]

 https://youtu.be/EFC_uEEzW1U


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: