Posted by: ramrajya | March 13, 2016

தமிழகத்து அந்தணர் சங்கங்களுக்கு எனது வேண்டுகோள். எஸ்.வி.ரமணி.

தமிழகத்து அந்தணர் சங்கங்களுக்கு எனது வேண்டுகோள். எஸ்.வி.ரமணி.

கலை,இலக்கியம்,கர்நாடக சங்கீதம்,இறைவழிபாட்டுக்கு வழிகாட்டியாக விளங்குதல் என்பதோடு மட்டுமல்ல,பழங்கால தமிழ் ஓலைச்சுவடிகளை பாதுகாத்தல்,இதிகாச புராணங்களின் சிறப்பைமக்களுக்குவிளக்குதல்,கணிதம்,விஞ்ஞானம்,தேசபக்தி,நீதிமன்றம் போன்றவைகளிலும் தலை சிறந்தவர்களாக விளங்கியவர்கள் அந்தணர்கள். அத்தகைய சிறப்புடைய பண்பாளர்ர்களை பார்ப்பனர்கள்என்று பாகுபாடு காட்டி புறந்தள்ள நினைத்தனர் திராவிட இயக்கத்த்தினர். கடந்த கால தேர்தல் காலத்தில் இராஜாஜி போன்ற அந்தண மேதைகளின் துணைகொண்டு,ஆட்சியைக் கைப்பற்றி ஆரவாரித்தனர் பகுத்தறிவுப்பகலவர்கள்.

பிறகு வந்த தேர்தல்களில் அந்தணர்களை புறந்தள்ளி,இலவசத்தைக்காட்டி மக்களின் மதியை மயக்கி, ஆட்சியைப்பிடித்து இலஞ்ச லாவண்யங்களில் ஈடுபட்டு கோடியில் புரளும் குபேரர்களாய் இன்று பதவி ஆசைபிடித்த பேயர்களாய்,ஒருவர் மீது ஒருவர் வீண்பழி சுமத்தி,பதவியைப் பிடிப்பதே கொள்கையாய்,மக்களே உங்கள் வாழ்வே எங்கள் வாழ்வு என்று நயவஞ்சக நாடகமாடுகின்றனர். எந்தக்காலத்திலும்,அந்தணர்கள் மற்றவர்களை ஏமாற்றியதாக வரலாறே கிடையாது.

நான் தேர்தல் நேரத்தில் இதை எழுதுவதன் நோக்கம், அந்தணர்கள் தங்களிடையே பண்பிலும்,அறிவிலும், ஆற்றலிலும் சிறந்த இளைஞர் சிலரை தேர்தலில் நிறுத்தி,மற்ற எல்லா அரசியல் கட்சிகளையும் அவரை ஆதரிக்க வேண்டுகோள் விடுக்கவேண்டும். பிராமண சங்கங்கள் இதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும். எங்கள் அங்கத்தினர்கள் மக்களுக்காகவே உழைப்பார்கள் அவர்களை நாங்களே கண்காணித்து,தவறு செய்தால பதவியை விட்டு நீக்கிவிடுவோம் என்று அறிக்கை விடவேண்டும்.தமிழ் இனத்தாரோடு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் அந்தணர்கள்,வேற்று மனிதர்களாகி விடுவார்களா?சாதி இரண்டொழிய வேறில்லை அதுதான் நீதி வழுவா நெறிமுறையின் இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தார். அந்தணர்கள் இன்று சாதி பாகுபாட்டை பாராட்டுவது இல்லை. வன்னியர்,நாடார்,முக்குலத்தோர்,என்று சாதிகள் பெயரைச்சொல்லி மக்களை மதிமயக்குபவர்கள் அந்தணர்கள் அல்ல. தங்கள் காரியம் ஆகவேண்டுமென்றால் அந்தணர்களை வாழ்த்த்துவதும்,இல்லையென்றால் அவர்களை எள்ளி நகையாடுவதும்,கருணாநிதியின் கைவந்த கலையாக இருக்கலாம்.ஆனால் அன்பு,பண்பு,நேர்மையுடன்,இன்று வரை இறை வழிபாட்டுக்கு மற்ற எல்லா மக்களுக்கும் வழிகாட்டியாக இருந்து தொண்டு செய்து வருபவர்கள் அந்தணர்கள்,அவர்களில் ஒரு சிலரை சட்டமன்ற அங்கத்தினர்களாக பதவிக்கு போட்டி இட்டால் எந்தத் தமிழ் இனத்தவருமே எதிர்க்க மாட்டார்கள்.

பதவிக்கு ஆசைப்படுபவர்கள்,அந்தணர்கள் அல்ல. ஆனால் அவர்களை அந்தப்பதவியில் அமர்த்தினால்,நேர்மையுடன் உழைக்க தயங்க மாட்டார்கள். பிராமண சங்கங்கள் இது குறித்து நல்ல முடிவு எடுக்க வேண்டிமேன்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி,வணக்கம். https://youtu.be/XzGArM8PC_0

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: