Posted by: ramrajya | March 15, 2016

தனித்து போட்டி இடுவதால் கட்டிய பணத்தை திரும்ப பெற தேமுதிகவினர் வற்புறுத்துகிறார்கள். எஸ்.வி.ரமணி.

தனித்து போட்டி இடுவதால் கட்டிய பணத்தை திரும்ப பெற தேமுதிகவினர் வற்புறுத்துகிறார்கள். எஸ்.வி.ரமணி.

தே.மு.தி.க., துணைக்கு வரும் என, தி.மு.க., எதிர்பார்த்த நிலையில், தனித்து போட்டி என்ற அறிவிப்பு வெளியானதால், தேர்தல் அறிக்கை வெளியிடுவதை தி.மு.க.,தள்ளி வைத்துள்ளது.பத்திரிகை செய்திகளைக் கேளுங்கள்.

சட்டசபை தேர்தலில், தி.மு.க., – காங்., – தே.மு.தி.க., கூட்டணி அமைக்க உள்ளன. தொகுதிகள் முடிவாகி விட்டது போன்று பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. ஆனால், எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை, தனித்து போட்டி என்ற அறிவிப்பை விஜயகாந்த் வெளியிட்டார். பழம் கனிந்து பாலில் விழும் என கூறிய கருணாநிதி, இதனால் அதிர்ச்சியடைந்தார். பாலில் விழும் என அவர் பேட்டியளித்தபோது, ஓரிரு நாளில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்ற தகவலை கூறியிருந்தார். ஒரு வாரத்துக்கு மேலாகியும், இதுவரை தேர்தல் அறிக்கை வெளியாகவில்லை. கூட்டணியை அமைத்து, தொகுதி பங்கீட்டை முடித்துக் கொண்டு, பின்னர் தேர்தல் அறிக்கையை வெளியிடலாம். இப்போதே தெரிவித்தால், பொதுமக்கள் மறந்து போகக்கூடும். மற்ற கட்சிகள், அறிக்கையை காப்பியடித்து, மக்களை கவரும் வகையிலான புதிய அறிக்கையை வெளியிடலாம். தேர்தல் களம் சூடுபிடிக்கட்டும். அதுவரையில் அமைதி காக்கலாம் என தி.மு.க., தலைமை கூறிவிட்டதால், தேர்தல் அறிக்கை வெளியீடு தள்ளிபோயுள்ளது.

தே.மு.தி.க., தேர்தல் அறிக்கை வெளியிட்டபோதும், அதை எந்த கட்சியும் பொருட்படுத்தவில்லை. அவை நடைமுறைக்கு சாத்தியமில்லாதவையாக உள்ளன. சினிமா பாணியில் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர் என மற்ற கட்சிகள் கிண்டலடிக்கின்றன. அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, தாலிக்கு தங்கம் திட்டம், லேப்டாப் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தவும், விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், பேனுக்கு பதிலாக, மின்சார அடுப்பு, ஸ்மார்ட்போன் போன்றவைகளை வினியோகிக்க திட்டமிட்டுள்ளது. தி.மு.க., சிறிய அளவிலான பிரிட்ஜ், டச் மொபைல் மற்றும் ஒவ்வொரு ஜாதியினரும் ஏற்கும் வகையில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு ஒதுக்கீடு, விவசாயிகளுக்கான சலுகைகள், புதிய தொழில் கொள்கைகள், மதுவிலக்கை விரைவாக அமல்படுத்துவது போன்றவற்றை தேர்தல் அறிக்கையில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது, வேட்பாளர் அறிவிப்பை விட இரண்டு கட்சிகளும், என்னென்ன மாதிரியான இலவசத்தை வழங்குவர் என்ற எதிர்பார்ப்பில், தமிழக வாக்காளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த, 10ம் தேதி, சென்னை, ராயப்பேட்டையில் நடந்த கட்சியின் மகளிர் அணி பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய காந்த், தே.மு.தி.க., தனித்து போட்டியிடும் என, அதிரடியாக அறிவித்தார். இதனால், கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.முன்னதாக, தி.மு.க., கூட்டணி நிச்சயம்

இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறியதாவது: தனித்து போட்டியிடும் முடிவை கட்சியினர் எதிர்பார்க்கவில்லை. தனித்து போட்டியிட்டால், தோல்வி உறுதி. தி.மு.க., தவிர்த்து, மற்ற கூட்டணி குறித்து அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.அதனால், கட்டிய பணத்தை திரும்ப பெற வேண்டும் என விரும்புகின்றனர். பணத்தை தரவில்லை என்றால், சிலர் போலீசில் புகார் தரவும் முடிவு செய்துள்ளனர். மேலும், சிலர், கட்சி பணியை மூட்டை கட்டிவிட்டு, பிழைப்பை பார்க்கவும் முடிவு செய்துள்ளனர். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.நன்றி,வணக்கம். https://youtu.be/UUQRuGnkHRs

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: