Posted by: ramrajya | March 20, 2016

விஜயகாந்தின் தலைமைச் சோதனை அவருக்கு வேதனையைத்தான் தந்துள்ளது.எஸ்வி.ரமணி.

விஜயகாந்தின் தலைமைச் சோதனை அவருக்கு வேதனையைத்தான்  தந்துள்ளது.எஸ்வி.ரமணி.

விஜயகாந்த் தேர்தலில் தன் தலைமையை ஏற்பவர்களை ஓடி வாங்க…ஓடிவாங்க என்ற கூக்குரல் கொடுத்துப்பார்த்தார். ஆனால் அவரை தேடிவந்தவர்கள் எல்லாம் இன்று திரும்பிக்கூட பார்க்கமாட்டேன் என்கிறார்கள். அரசியலில் பக்குவப்பட்ட கருணாநிதியே கூட்டணிக்கு ஆளைத்தேடி ஆலாய் பறக்கிறார். விஜயகாந்திற்கு இன்று இருக்கும் ஒரேவழி,பாஜக ஆணியில் அவர்கள் மணம் இறங்கி சேர்த்துக் கொண்டால் சேரலாம். நான்கு தொகுதிகளிலாவது அவர் கட்சி வெற்றி பெறலாம் என்பது நமதுகருத்து..ஏற்றுக்கொள்வதும்,மறுப்பதும் அவர் உரிமை. பத்திரிகையில் வந்த செய்தியைக் கேளுங்கள்.

தே.மு.தி.க., தலைமையில், தனி அணி அமைக்கும் முயற்சியில் இறங்கப் போவதாக அறிவித்த, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், கூட்டணி சேர யாருமே முன் வராததால், கடும் விரக்தி அடைந்து உள்ளார். அவரின் தலைமையை ஏற்க மறுத்து, அனைத்து கட்சிகளும் ஓரங்கட்டுவதால், தவிப்புக்கும் ஆளாகி உள்ளார்.

கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட, தே.மு.தி.க., 29 இடங்களில் வெற்றி பெற்றது. அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த், சட்ட சபையில் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் பெற்றார். ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து, தே.மு.தி.க., விலகியது. உள்ளாட்சி தேர்தலில், தனித்துப் போட்டியிட்டு, தோல்வியையும் தழுவியது.இதன்பின், 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தார் விஜயகாந்த். அவரின், தே.மு.தி.க., கட்சி, 14 இடங்களில் போட்டியிட்டு, ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை; அத்துடன், கட்சி பெற்ற ஓட்டும், 10லிருந்து, 5 சதவீதமாகக் குறைந்தது. இருப்பினும்,

ஒரு கோப்பையிலே என் குடி இருப்பு,ஒரு கோலமயில் என் துணை இருப்புநான் பார்ப்பதெல்லாம் எதிரிகளின் சிரிப்பு என்று அவர் பாட வேண்டிய நிலைமையில்தான் இன்று உள்ளார். நன்றி,வணக்கம். https://youtu.be/HrxZhFTwYqo


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: