Posted by: ramrajya | March 22, 2016

கருணாநிதியின், விஜயகாந்த் இழுப்பு நாடகம் நிறைவேறுமா, சொதப்புமா? எஸ்.வி.ரமணி.

கருணாநிதியின், விஜயகாந்த் இழுப்பு நாடகம் நிறைவேறுமா, சொதப்புமா? எஸ்.வி.ரமணி.

பத்திரிகைகளில் வந்த செய்தி.

ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில், தி.மு.க.,வைக் காட்டிலும், தெள்ளத் தெளிவாக விஜயகாந்த் இருப்பதை தெரிந்து தான், ‘அவரோட இம்முறை கூட்டணிஅமைக்கலாம்என, கருணாநிதி கூறியுள்ளார்.இதை சொன்னதுமே, ‘அது சரிபட்டு வராதுஎன, பொருளாளர் ஸ்டாலின் முகத்தை சுளித்துள்ளார். அதன்பின், கட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து, கருணாநிதியே, ஸ்டாலினிடம் எடுத்துச் சொல்லி, புரிய வைத்தார்.

பின், விஜயகாந்தை கூட்டணியில் சேர்த்துக் கொள்வது என முடிவானது. மற்றவர்கள், விஜயகாந்திடம் பேசும்போது, அதை ஸ்டாலின் சொதப்பி விடக்கூடாது என்பதால், கூட்டணி பேசும் பொறுப்பை, அவரிடமே தந்தார் கருணாநிதி. அவரோ, தன்னை முதல்வராக்கி, அழகு பார்ப்பதில் தீவிரமாக இருக்கும், மருமகன் சபரீசனிடம், அந்த பொறுப்பை ஒப்படைத்தார்.தேர்தல் செலவு பற்றியும் பேச வேண்டும் என்பதால், சொந்தக்கார, ‘டிவிஅதிபர் ஒருவரையும், அந்த அணியில் சேர்த்தனர்.பேச்சு துவங்கியதும், முதல் பந்திலேயே, ‘ஸ்டம்ப் அவுட்ஆனது, தி.மு.க., அணி.

‘114 சீட்; ஆட்சியில் பங்கு; துணை முதல்வர் பதவி; ஐந்து அமைச்சர்கள்; தேர்தல் செலவுக்கு பெருந்தொகைஎன அடுக்கப்பட்டு உள்ளது. அதிர்ந்த, ஸ்டாலின் மருமகன் சபரீசன், ‘இது ஆவதற்கில்லைஎன, எழுந்து விட்டாராம்.ஒரு கட்டத்தில் பேச்சு முற்றி, ‘எதுக்கு இப்படி சுற்றி வளைச்சிக்கிட்டு; பேசாம தி.மு.க.,வையே எழுதி வாங்கிக்கலாமே…என, எரிச்சல் வார்த்தைகளும் விழுந்துள்ளன.இரண்டு தரப்பும் மாறி மாறி பேசியதில், 59, ‘சீட்என முடிவாகி உள்ளது. செலவு பற்றி கவலையே பட வேண்டாம். உள்ளாட்சி, கூட்டுறவெல்லாம் தேர்தல் முடிந்த பின் பார்த்துக் கொள்ளலாம். கூட்டணி ஆட்சி என்பது இல்லைஎன, தெளிவாக சொல்லி விட்டனர்.

இதற்கிடையில், தி.மு.க., தரப்பில், விஜயகாந்த் உறவுக்காரர்கள், தே.மு.தி.க., பிரமுகர்கள் என, அனைவரிடமும் பேசப்பட்டது. ஆளாளுக்கு ஒரு தகவலை சொல்ல, குழப்பம் அடைந்த கருணாநிதி, உண்மை அறிய விரும்பினார். அவரே சிலரை அனுப்பி, விஜயகாந்திடம் பேச செய்துள்ளார். அதன்மூலம், தகவல்களை அறிந்த கருணாநிதி, ‘கூட்டணி ஆட்சி ஒரு பிரச்னை இல்லைஎன, சொல்லி அனுப்பினார். அதன்பின்னும், ‘தனித்து போட்டிஎன, அறிவித்தார் விஜயகாந்த்.

கருணாநிதியின் நாடகம் நிறைவேறுமா? திமுகவை புனிதர்கள் என்று விஜயகாந்த் ஏற்றுக்கொள்வாரா?நாடகக் காட்சிகளை தொடர்ந்து பார்ப்போம்.நன்றி,வணக்கம்.

https://youtu.be/1c7x8KcT3BE


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: