Posted by: ramrajya | March 23, 2016

தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணி, இலங்கை தமிழர்களின் ரத்தத்தில் உருவானது’ என்பதில் சந்தேகம் இல்லை.எஸ்.வி.ரமணி.

தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணி, இலங்கை தமிழர்களின் ரத்தத்தில் உருவானது என்பதில் சந்தேகம் இல்லை.எஸ்.வி.ரமணி.

2009 ஆம் ஆண்டு,இலங்கைத்தமிழ் சகோதரர்களை கொத்து,கொத்தாகஇலட்ச்சக்கணக்கில் கொன்று குவித்து கோரத்தாண்டவம் ஆடினான்,கொடியவன்ராஜபக்க்ஷே.அதைக்கண்டுகொள்ளாமல்போலிக்கண்ணீர்வடித்துக்கொண்டிருந்தவர்கள்,திமுகவும், காங்கிரஸ் கட்சியினரும்.

நாட்டுமக்கள் அனைவருக்கும் தெரிந்த இந்த இருவரின் கபட நாடகத்தை அறியாதவர்கள் யாருமே கிடையாது.  தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணி, இலங்கை தமிழர்களின் ரத்தத்தில் உருவானதுஎன, வரலாறு தெரியாமல் தமிழிசை சவுந்தரராஜன் பேசி இருக்கிறார். என்று இளங்கோவன் இப்போது பிதற்றுகிறார். தன் மத்திய அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்யச்சொல்லி,இலங்கை போர் நிறுத்தத்தை கொண்டுவராத கருணாநிதியும்,சோனியாவும் அன்றும் கூட்டு இன்றும் கூட்டணி சேருவதில் வியப்பில்லை. இவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.பத்திரிகை செய்தியைக்கேளுங்கள்.

தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்த, ஓரிரு நாளில் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர், சென்னைக்கு வருகின்றனர்,” என, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.

சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:சோனியா அறிவுரைப்படி, டில்லியில் இருந்து குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர், இன்னும் ஓரிரு நாளில் சென்னை வருகின்றனர். தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வசதிக்கு ஏற்ப, அவரை சந்தித்து, தொகுதிப் பங்கீடு குறித்து பேச முடிவு செய்வர். இன்னும், 10 நாட்களில், காங்கிரஸ் பிரசாரம் துவக்கவுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே, தலித்துகளின் ஆதரவை பெற, அம்பேத்கரின் ரத யாத்திரையை துவக்கியுள்ளோம். இந்த ரத யாத்திரை, தமிழ்நாடு முழுவதும் செல்லும்.

தே.மு.தி.க., வராவிட்டாலும், தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது; இந்த கூட்டணி வெல்லும். தி.மு.க., கூட்டணி பற்றி, வைகோ விமர்சித்து வருகிறார். அந்த கூட்டணியில், நான்கு தலைவர்கள் உள்ளனர் என்பதை காட்டுவதற்காகவே, ஏதாவது பேசுகின்றனர்.

முதல்வர் வேட்பாளரை அறிவித்ததும், அந்த கூட்டணி, ‘டமால்என உடையும். தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணி, இலங்கை தமிழர்களின் ரத்தத்தில் உருவானதுஎன, வரலாறு தெரியாமல் தமிழிசை சவுந்தரராஜன் பேசி இருக்கிறார். இலங்கை தமிழர்களுக்கு, காங்கிரஸ் என்னவெல்லாம் செய்தது என்பதை, அவரது தந்தை குமரி அனந்தனிடம் கேட்டு தெரிந்து கொண்டு, பின்பேசுவது நல்லது.இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கைத்தமிழர்கள் இலங்கையில் கொன்று குவிக்கப்பட்டபோது வாய் மூடி மௌனியாக இருந்த காங்கிரசை மக்கள் நன்கு அறிவார்கள். இலங்கையில் இலட்சக்கணக்கில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் ஆவிகள், இளங்கோவனை விரட்டி அடிக்கப்போவது உண்மை. வரும் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு,மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். நன்றி,வணக்கம். https://youtu.be/Mr-lhb3PUNM


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: