Posted by: ramrajya | March 25, 2016

அழகிரிக்கு திமுகவை விட்டால் போக்கிடம் கிடையாது. Alagiri meets Karunanidhis எஸ்.வி.ரமணி.

அழகிரிக்கு திமுகவை விட்டால் போக்கிடம் கிடையாது. Alagiri meets Karunanidhis  எஸ்.வி.ரமணி.

மதுரை மல்லனாக விளங்கிய அழகிரியை,கடந்த தேர்தலின்போது இருக்கும் இடம் தெரியாமல் ஓடச்செய்தவர் ஜெயலலிதா. தற்போது எந்தக் கட்சியோடும் இணைய வழி இல்லாத காரணத்தால்,தந்தையே சரணம் என்று வந்து விட்டார்.பத்திரிகைகளில் வந்த செய்திகளை உங்களுக்காக சொல்கின்றேன்.

திமுக தலைவர் கருணாநிதியை அவரது மகனும் மத்திய முன்னாள் அமைச்சருமான மு.க.அழகிரி 2 ஆண்டுகளுக்குப் பிறகு, 24-3-16 வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

 அப்போது, “பொறுமையாக இரு, பார்த்துக் கொள்கிறேன் (கட்சியில் சேர்க்க)என்று கருணாநிதி உத்தரவாதம் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து, அழகிரி திமுகவில் சேர்த்துகொள்ளப்படுவார் என்று தெரிகிறது.

 கருணாநிதியுடன் சந்திப்பு: கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகக் கூறி, 2014 மார்ச் 25-ஆம் தேதி திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டார். அதன் பிறகு மு.க.ஸ்டாலின் உயிர் தொடர்பாக அழகிரி மிரட்டியதாகவும் செய்தியாளர்களிடம் கருணாநிதி கூறினார். இதனால், கருணாநிதியுடனான சந்திப்பையே அழகிரி தவிர்த்து வந்தார். கருணாநிதியே அழைத்து பேசாதவரை, அவரைச் சந்திக்கப் போவது இல்லை என்ற நிலைப்பாட்டை அழகிரி எடுத்திருந்தார்.

 இதனால் கடந்த 2 ஆண்டுகளில் கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி இருக்கும்போது, பல முறை அழகிரி வந்து கீழ் தளத்தில் தாயார் தயாளு அம்மாளை மட்டும் சந்திப்பார். ஆனால், கருணாநிதியைச் சந்திப்பதை மட்டும் தவிர்த்து வந்தார். இந்த நிலையில், கோபாலபுரம் இல்லத்துக்கு அழகிரி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு வந்தார். தயாளு அம்மாளைச் சந்தித்துவிட்டு, மாடியில் இருந்த கருணாநிதியை 2 ஆண்டுகளுக்கு பின் சந்தித்தார். அப்போது, கட்சியில் எந்தப் பொறுப்பும் இல்லாமல் திமுகவுக்காக தேர்தல் பணியாற்றத் தயாராக இருப்பதாக அழகிரி கூறியுள்ளார். தொடர்ந்து என் உரையைக்கேளுங்கள். https://youtu.be/hw0eb6MF3b0


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: