Posted by: ramrajya | March 26, 2016

கருணாநிதி விரிக்கும் வலையில் பாமக மீன் சிக்குமா? எஸ்.வி.ரமணி.

கருணாநிதி விரிக்கும் வலையில் பாமக மீன் சிக்குமா? எஸ்.வி.ரமணி.

பாவம் தொண்ணூற்றி இரண்டு வயதிலும்,கட்சியை கரை சேர்க்க இராப்பகலாய் பாடுபடும் கருணாநிதியின் தற்போதைய நிலையை நினைத்தால் வேதனையாகத்தான்  உள்ளது. இதற்குக்காரணம் பதவி வந்ததும்,நிலை மாறி நடந்து இலஞ்ச ஊழலில் ஈடுபட்டு சேராத இடந்தனில் சேர்ந்ததுதான். பத்திரிக்கைச் செய்தியைக்  கேளுங்கள்.

கூட்டணி சேர, தே.மு.தி.க., வராத நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின்கடைசி முயற்சியாக, பா.ம.க.,வுக்கு வலை விரிக்கப்பட்டு உள்ளது; பா.ம.க., சிக்குமா என்பது, அக்கட்சியின் முடிவில் உள்ளது.கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இணைந்து பா.ம.க., போட்டியிட்டது. ஆனால், மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தி.மு.க., 23ல் வெற்றி பெற்றது. அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட, தே.மு.தி.க., இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்ததால், எதிர்க்கட்சி அந்தஸ்தை, தி.மு.க., இழந்தது.

இந்நிலையில், தோல்வி கூட்டணியில் நீடிக்க விரும்பாத, பா.ம.க., விலகியது. அடுத்து நடந்த உள்ளாட்சி தேர்தலில், தனித்து போட்டியிட்டு, சரிவை சந்தித்தது. அதனால், 2014 லோக்சபா தேர்தலில், தனித்து போட்டியிடும் முடிவை .கைவிட்டு, பா.ஜ., கூட்டணியில் இடம் பிடித்தது. எட்டு தொகுதிகளில் போட்டியிட்டாலும், அன்புமணி போட்டியிட்ட தர்மபுரியில் மட்டுமே, கட்சி கரை சேர்ந்தது.

தற்போது, கூட்டணியில் சேரும்படி, பா.ஜ., விடுத்த தொடர் அழைப்பை நிராகரித்து, சட்டசபை தேர்தலை தனித்து சந்திக்க ஆயத்தமாகி உள்ளது. கட்சியின் முதல்வர் வேட்பாளராக, அன்புமணியை களமிறக்கி உள்ளதுஇப்பின்னணியில், இதுவரை, பா.ம.க.,வை பொருட்படுத்த மறுத்து வந்த, தி.மு.க., தலைமை, இப்போது மெல்ல தைலாபுரம் பக்கம் திரும்ப துவங்கி உள்ளது. தே.மு.தி.க., வராததால் ஏற்பட்டுள்ள இழப்பை சரிகட்ட, பா.ம.க., அவசியம் என கணக்கு போட்டு, ராமதாசுக்கு வலை விரித்துஉள்ளது.

திராவிடக் கட்சிகளுடன் கூட்டு சேர் என்று யாராவது சொன்னாள் அவர்கள் கன்னத்தில் அறைவேன் என்று கூறிய பாமக இராமதாசிடம் கருணாநிதி எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தொடர்ந்து என் உரையைக் கேளுங்கள். நன்றி,வணக்கம்.

https://youtu.be/5QwTR2X14ts


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: