Posted by: ramrajya | March 27, 2016

சாதிக்பாட்சா தூக்கில் தொங்கியதற்கு திமுகதான் காரணம் என்று வைகோ குற்றச்சாட்டு.எஸ்.வி.ரமணி.

சாதிக்பாட்சா தூக்கில் தொங்கியதற்கு திமுகதான் காரணம் என்று வைகோ குற்றச்சாட்டு.எஸ்.வி.ரமணி.

தமிழக தேர்தல் களம் பலவித குற்றச்சாட்டுகளுடம் சூடு பிடிக்கத் துவங்கி உள்ளது. தேமுதிகவை, திமுக தன் கூட்டணியில் சேர்க்க 500 கோடியும், எண்பது தொகுதிகளும் பேரம் பேசியதாக வைகோ கூற அவர் மீது வழக்கு பாய்ந்துள்ளது. ஆனால் பணத்திலும்,பேரத்திலும் கூடக் குறைவாக இருந்தாலும்,பேரம்,பேரம்தான். அதனால்தான் வைகோ வழக்கறிஞர் என்ற முறையில் தைரியமாக பேசி உள்ளார் போல் இருக்கிறது. அடுத்ததாக சாதிக் பாட்சா கொலையில் ஸ்டாலினுக்கு தொடர்பு உள்ளதாக திடுக்கிடும் குற்றச்சாட்டைக் கூறி உள்ளார்.இதற்கு என்ன செய்யப் போகிறார்கள்? பத்திரிக்கைச் செய்திகளைக் கேளுங்கள்.

சி.பி.ஐ., விசாரணையின் போது, சாஹித் பல்வாவுக்கும், ஸ்டாலினுக்கும் இடையே உள்ள உறவை சொல்லியதால், சாதிக் பாட்சா தூக்கில் தொங்கினார். எனவே, ‘2ஜி ஸ்பெக்ட்ரம்ஊழல் பின்னணியில் ஸ்டாலினுக்கு தொடர்பு உள்ளதுஎன, திருச்சியில், நேற்று, வைகோ குற்றம் சாட்டினார்.

சாதிக் பாட்ஷா சாவுக்கு, தி.மு.க.,தான் காரணம் என்று, குற்றம்சாட்டிய என் மீது, வழக்குப் போட, வக்கு இல்லாத ஸ்டாலின், கூட்டணிக்கு பேரம் பேசியது பற்றிய செய்தி, நாளிதழ்களில் வெளியான ஆத்திரத்தில், என் மீது மான நஷ்ட வழக்கு போடுவோம் என்கிறார். ‘2ஜி ஸ்பெக்ட்ரம்வழக்கு பின்னணியில் இருந்தது ஸ்டாலின்தான் என நான் சொல்கிறேன். இதற்கு என் மீது, ஸ்டாலினை வழக்கு போடச் சொல்லுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

சாதிக் பாட்ஷா மரணத்தில், என்ன நடந்தது. இந்த நினைவு நாளில், ‘சேராத இடம்சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்ந்தாயடாஎன்று, சாதிக் பாட்ஷா குடும்பத்தினர் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.

வைகோவின் சவாலை ஸ்டாலின் ஏற்றுக்கொள்வாரா? தொடர்ந்து என் உரையைக்கேளுங்கள். நன்றி,வணக்கம். https://youtu.be/98oYK6CIUgE


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: