Posted by: ramrajya | March 28, 2016

மக்கள் நல கூட்டணியில் அனைத்து தலைவர்களும் நண்பர்கள் போல பழகுகிறோம். திருமாவளவன் பேட்டி. எஸ்.வி.ரமணி.

மக்கள் நல கூட்டணியில் அனைத்து தலைவர்களும் நண்பர்கள் போல பழகுகிறோம். திருமாவளவன் பேட்டி. எஸ்.வி.ரமணி.

சென்னையில்  மார்ச். 28ல் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பத்திரிக்கையாளருக்கு அளித்த பேட்டி விவரத்தை உங்களுக்கு சொல்லி உள்ளேன்.

கேள்வி:மக்கள் நல கூட்டணியில் முன்னதாக முதல்அமைச்சர் வேட்பாளர் யார்? என முடிவு செய்யவில்லை. ஆனால். இப்போது விஜயகாந்தை முதல்அமைச்சர் வேட்பாளராக உங்கள் கூட்டணியில் முன்நிறுத்தி இருக்கிறீர்கள். இதில், நீங்கள் சமரசம் அடைந்து விட்டீர்களா?

பதில்:எங்கள் கூட்டணியில் உள்ள வைகோ, ராமகிருஷ்ணன், முத்தரசன் அல்லது நான் இவர்களில் ஒருவரை முதல்அமைச்சர் வேட்பாளராக அறிவித்து இருந்தால் இதுபற்றி நீங்கள் கேட்கலாம். ஆனால், தே.மு.தி.க.வில் ஏற்கனவே முதல்அமைச்சர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவித்து விட்டார்கள். பின்னர் தே.மு.தி.க. இந்த கூட்டணியில் இடம்பெற்றது. எனவே, அவரை முதல்அமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டோம். எங்களின் கொள்கையான பூரண மதுவிலக்கு, ஊழல் ஒழிப்பு, கூட்டணி ஆட்சி ஆகியவற்றை தே.மு.தி.க. ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, விஜயகாந்தை முதல்அமைச்சர் வேட்பாளராக ஏற்பதில் எந்த பிரச்சினையும் இல்லை.

கே:தே.மு.தி.க. தேர்தல் அறிக்கையில் தனியார் துறைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் நல கூட்டணி பிரசாரத்தில் பொது துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக பிரசாரம் செய்கிறீர்கள். இதனால் உங்கள் மத்தியில் குழப்பம் இல்லையா?

ப:பொதுவான பிரச்சினைகளை முன்வைத்து நாங்கள் இப்போது கூட்டணி சேர்ந்து இருக்கிறோம்.

தே.மு.தி.க. ஏற்கனவே தேர்தல் அறிக்கையை வெளியிட்டு விட்டது. நாங்கள் 4 கட்சிகளும் குறைந்த பட்ச பொது திட்டத்தின் கீழ் ஒரு அணியை முதலில் உருவாக்கி இருந்தோம். இப்போது எல்லோருமாக சேர்ந்து பொதுவான தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம்.

கே:இதற்கு முன்பு தி.மு.க., அ.தி.மு.க.வுடன் விடுதலை சிறுத்தைகள் கூட்டணி அமைத்து உள்ளது. இப்போது மக்கள் நல கூட்டணியில் இருக்கும் அனுபவம் எப்படி உள்ளது.?

ப:தி.மு.க. தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆகியோரிடம் கூட்டணி அமைத்த போது அவர்களிடம் இருந்து சற்று விலகியே இருந்தோம். ஆனால், மக்கள் நல கூட்டணியில் அனைத்து தலைவர்களும் ஒற்றுமையாக நண்பர்கள் போல பழகுகிறோம். இது அடிமட்ட தொண்டர்களில் இருந்து மேல் மட்டம் வரை நீடிக்கிறது.

இவ்வாறு திருமாவளவன் பேடடியில் கூறினார். கேப்டன் விஜயகாந்தும்,மக்கள் நலக கூட்டணியும் ஒற்றுமையுடன் தங்கள் கொள்கைகளைச் சொல்லி தேர்தலில்,களம காண வேண்டும் என்றுதான் எல்லா மக்களும் விரும்புகிறார்கள். நன்றி,வணக்கம். https://youtu.be/feGxUn5C4tQ


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: