Posted by: ramrajya | March 30, 2016

ஏமாற்றி விட்டார் நடிகை குத்து ரம்யா,:தற்கொலை செய்த விவசாயி மனைவி புகார். எஸ்.வி.ரமணி.

ஏமாற்றி விட்டார் நடிகை குத்து ரம்யா,:தற்கொலை செய்த விவசாயி மனைவி புகார். எஸ்.வி.ரமணி.

 பத்திரிக்கைச் செய்தியைக் கேளுங்கள்.

பெங்களூருவில் தற்கொலை செய்த விவசாயியின் குழந்தைகள் படிப்பு செலவை ஏற்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டதாக, நடிகையும் முன்னாள் காங்கிரஸ்  எம்.பி.,யுமான ரம்யாவுக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 உதவித்தொகை அளிப்பதாக…கர்நாடகாவில், காங்கிரசைச் சேர்ந்த சித்தராமையா முதல்வராக உள்ளார். 2015 அக்டோபரில், மாண்டியா மாவட்டத்தில் ஒரு விவசாயி, கடன் தொல்லையால் தற்கொலை செய்தார். அவர் குடும்பத்திற்கு, ஐந்து லட்சம் ரூபாய் உதவித்தொகை அளிப்பதாக, கர்நாடக அரசு அறிவித்தது. இறந்த விவசாயியின் வீட்டுக்கு, காங்., துணைத் தலைவர் ராகுல் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது, மாநில அரசின் உதவித்தொகை கிடைக்காததை அறிந்து, கண்டனம் தெரிவித்த ராகுல், உடனடியாக அத்தொகையை அளிக்கும்படி, முதல்வர் சித்தராமையாவை கேட்டுக் கொண்டார். அப்போது, ராகுலுடன், விவசாயி வீட்டுக்கு சென்றிருந்த நடிகை, ‘குத்துரம்யா, விவசாயியின் இரு குழந்தைகள் படிப்புச் செலவை ஏற்றுக் கொள்வதாக வாக்குறுதி அளித்தார். அதற்கு, ராகுல் பாராட்டு தெரிவித்தார்.

 இந்நிலையில், ‘நடிகை ரம்யா, ஏற்கனவே அறிவித்தபடி, விவசாயியின் குழந்தைகள் படிப்புச் செலவுக்கு பணம் எதுவும் தரவில்லைஎன, விவசாயியின் மனைவி ஷோபா குற்றஞ்சாட்டி உள்ளார்.

 இதுகுறித்து, ஷோபா கூறுகையில், ”நடிகை ரம்யா, இதுவரை, என் குழந்தைகளின் படிப்புச் செலவுக்காக, ஒரு பைசா கூட தரவில்லை. அவர் வாக்குறுதி தவறிவிட்டார்,” என்றார்.

 சிம்பு நடித்த குத்துபடத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரம்யா. அந்தப்படத்திலிருந்து அவரை எல்லோரும் குத்துரம்யா குத்துரம்யா என்றே கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். தமிழில் கிரி, வாரணம் ஆயிரம், பொல்லாதவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்த ரம்யா அதன்பிறகு தனது தாய் மொழியான கன்னடப் படங்களில் நடித்து அதன்பிறகு கர்நாடக அரசியலில் தீவிரமாக களமிறங்கினார். இப்போது அவர் குட்டைப் பாவாடையுடன் ஆடவேண்டாம்,ஆனால் கர்நாடகா விவசாயிக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினால் போதும். நன்றி,வணக்கம். https://youtu.be/fsWjJjIRJ-8


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: