Posted by: ramrajya | March 31, 2016

பஞ்சத்துக்கு கூட்டு சேர்ந்த அணி பஞ்ச பாண்டவர் அணி என்று நடிகை விந்தியா கூறினார்.

பஞ்சத்துக்கு கூட்டு சேர்ந்த அணி பஞ்ச பாண்டவர் அணி என்று நடிகை விந்தியா கூறினார்.

 பண்ருட்டி, மார்ச். 29–3-16ல் நடை பெற்றகடலூர் மாவட்டம் தொரப்பாடி பேரூராட்சி அ.தி.மு.க. சார்பில் புதுப்பேட்டையில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 அ.தி.மு.க. செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நடிகை விந்தியா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

 பாட்டாளி மக்கள் கட்சியினர் ஒரு காலத்தில் மரங்களை எல்லாம் வெட்டி ரோட்டில் போட்டனர். இதனால் தமிழக மக்கள் கடும் துன்பத்துக்கு ஆளானார்கள். இப்போது தமிழ்நாட்டுக்கு நல்லது செய்யப்போறதா சொல்றாங்க. ராமதாசு தன் மகனுக்காக மட்டுமே பா.ம.க. கட்சியை நடத்துகிறார். இவரால் தொண்டர்களுக்கு எந்த பயனும் இல்லை. தொண்டர்கள் பலிக்கடா ஆக்கப்படுகிறார்கள்.

 அதேபோல மக்கள் நலக் கூட்டணியால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை. அவர்களுடன் விஜயகாந்த் சேர்ந்ததால் பெரிதாக எதுவும் மாற்றம் ஏற்பட்டுவிடாது. நாலுபேரோட ஐந்தாவது ஆளா இவரும் போய் சேர்ந்திருக்கிறார் அவ்வளவுதான்.

 எம்.ஜி.ஆர். என்றும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். எம்.ஜி.ஆரோடு விஜயகாந்தை ஒப்பிட்டு பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன். தி.மு.க.வினர் ஆட்சியில் இருந்த போது நமக்கு நாமே பயணம் செல்லவில்லை. இப்போது மட்டும் அதுக்கு என்ன அவசியம் என்று தெரியல. தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது.

 புரட்சி தலைவி அம்மாவின் திட்டங்கள் அ.தி.மு.க.விற்கு வெற்றியை தேடித்தரும். அம்மா தான் எங்களுக்கு கடவுள். அம்மா அறிவிக்கும் வேட்பாளரை அதிகளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய அனைவரும் அயராது பாடுபடவேண்டும். என்று விந்தியா கூறினார்.

 மார்ச். 30–3-16ல் நெய்வேலியில் சிறப்பு அழைப்பாளராக நடிகை விந்தியா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:தொடர்ந்து என் தமிழ் உரையைக்கேளுங்கள். https://youtu.be/fj4mmXBXH_E


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: