Posted by: ramrajya | April 2, 2016

ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வர் ஆவார் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வர் ஆவார் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 130 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் மாநிலத்தில் ஆட்சியமைக்கும் என்று கருத்துக் கணிப்புத் தகவல் தெரிவிக்கிறது. பத்திரிகை செய்தியைக்கேளுங்கள்.

 தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது.

 இந்த மாநிலங்களில் இந்தியா டிவியும், சி-வோட்டர்ஸ் அமைப்பும் இணைந்து மார்ச் மாதம் 4ஆவது வாரத்தில் கருத்துக் கணிப்பு நடத்தின.

 அந்த கருத்துக் கணிப்பு முடிவில், தமிழக சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக 130இல் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்தியா டிவி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

 தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, 130 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையைப் பெறும். திமுக-காங்கிரஸ் கூட்டணி 70 இடங்களைப் பிடிக்கும். பிற கட்சிகள் 34 இடங்களைப் பெறும்.

 அதேசமயம், கடந்த தேர்தல்களில் 51.9 சதவீதமாக இருந்த அதிமுகவின் வாக்கு விகிதம் தற்போது 39.1ஆக சரியலாம். திமுக-காங்கிரஸ் கூட்டணியின் வாக்குவிகிதமும், 39.5 சதவீதத்தில் இருந்து 31.8ஆக குறையலாம். பாஜக தலைமையிலான கூட்டணியின் வாக்கு விகிதம், 2.2 சதவீதத்தில் இருந்து 4.1 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கேரளம்: கேரளத்தில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் இடதுசாரிக் கூட்டணி 86 இடங்களில் வெற்றி பெறும். காங்கிரஸ் கூட்டணிக்கு 53 இடங்களே கிடைக்கும். பாஜக தலைமையிலான கூட்டணிக்கு ஓரேயொரு இடம் மட்டுமே கிடைக்கும்.

இடதுசாரிக் கூட்டணியின் வாக்கு சதவீதம் 0.2 சதவீதம் உயர்ந்து, 43.8 சதவீதமாக அதிகரிக்கும். காங்கிரஸ் கூட்டணியின் வாக்கு விகிதம் 45.8 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதம் குறைந்து, 41.3ஆக இருக்கும்..

 மேற்கு வங்கத்தில் மீண்டும் மம்தா ஆட்சி: மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 160இல் வெற்றி பெறும். முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராவார். முந்தைய தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்ற 184 இடங்களுடன் ஒப்பிடுகையில், இது 24 இடங்கள் குறைவாகும்.

தமிழகத்தில் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்று,மக்கள் குறைகள் அனைத்தையும் போக்கவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் ஆகும். நன்றி,வணக்கம். https://youtu.be/2-5W7FhvcuE


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: