Posted by: ramrajya | April 3, 2016

சிறுதாவூரில் பணம் பதுக்கப்பட்டுள்ளது என்று சொல்லி கோபாலபுரத்தில் பதுக்கி இருப்பார்களா? எஸ்.வி.ரமணி.

சிறுதாவூரில் பணம் பதுக்கப்பட்டுள்ளது என்று சொல்லி கோபாலபுரத்தில் பதுக்கி இருப்பார்களா? எஸ்.வி.ரமணி.

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, அவரை தொடர்ந்து தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் கூறிய புகாரில் உண்மை ஏதும் இல்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மறுப்பு தெரிவித்துள்ளார்.  கடந்த சில நாட்களுக்கு முன்னர் ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சில கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டனர். இந்த கற்பனைக்கதைகள் குறித்து அப்போதே காவல்துறையிடம் காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் புகார் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில் காவல்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்தநிலையில் தேர்தல் கமிஷனும் அந்த புகாரில் உண்மையில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது.  இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- சட்டசபை தேர்தல் தொடர்பாக இதுவரை 4 ஆயிரத்து 700 புகார்கள் வந்துள்ளது. இதில் 4,600 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. ஒவ்வொரு புகார்களையும் தேர்தல் ஆணையம் கவனித்து வருகிறது. வரும் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் தொடர்பான புகார்களை ஆன்லைனிலும் தெரிவிக்கலாம். இதன் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்படும்.  சிறுதாவூர் பங்களாவுக்கு அருகே கண்டெய்னர் லாரிகளில் பணம் வந்ததாக எழுந்த புகார் தொடர்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் எஸ்.பி.யிடம் அறிக்கை கோரப்பட்டது. அதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையும், கலெக்டரும் புகாரில் குறிப்பிட்ட தகவலை உறுதிபடுத்த முடியவில்லை என்றும், அந்த தகவலில் உண்மையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.  என்று அவர் தெரிவித்தார்.

திருச்சி:தமிழக சட்டசபை தேர்தலையொட்டி இந்திய கம்யூ. கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன், திருச்சியில் அளித்த பேட்டி, சிறுதாவூர்பங்களாவில் லாரியில் பணம் இருப்பதாக கூறுபவர்களே கண்டுபிடித்து தரலாமே என்று கூறி உள்ளார்.

இதைப்போல் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தான் ஜெயலலிதாவை இரண்டு முறை சந்தித்துள்ளேன் என்று கூறி உள்ளார். முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவராக உள்ள நடிகர் கருணாஸ், இன்று சென்னை போயஸ் தோட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்  நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என்றார். ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என்பவர்கள் வெங்கையா நாயுடுவையும்,கருணாசையும் கேட்டுப் பார்க்கட்டும்.

இப்படி பலரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தாக கூறுகையில்,வைகோவும்,ஸ்டாலினும் சிறுதாவூர் பங்களாவில் பணம் பதுக்கப் பட்டுள்ளது  என்றும் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என்றும் பொய்யான புகார்கள் கூறுவதில் எந்தப் பலனும் கிடையாது. சிறுதாவூரில் பணம் என்பவர்களுக்கு, கோபாலபுரத்திலும் பணம் பதுக்கப்பட்டுள்ளது என்று மற்றவர்கள் சொல்ல எவ்வளவு நேரம் ஆகும்? பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை ஏமாற்ற வேண்டாம். நன்றி, https://youtu.be/eOlQYTAf1n4


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: