Posted by: ramrajya | April 17, 2016

ரஜினிகாந்த் மாதிரி நான் யாருக்காகவும் பின்வாங்க மாட்டேன்” என்று விஜயகாந்த் கூறியிருந்தார்.

ரஜினிகாந்த் மாதிரி நான் யாருக்காகவும் பின்வாங்க மாட்டேன்என்று விஜயகாந்த்  கூறியிருந்தார்.

ரஜனியுடன் நல்லநண்பனாய்பழகுகிறேன் என்று சொல்லும் விஜயகாந்த,ரஜனியைப்போல் பயந்து பின் வாங்க மாட்டேன் என்ற வார்த்தையை உபயோகப் படுத்தி இருக்கக்கூடாது.. பத்திரிகை செய்தியைக் கேளுங்கள்.

ரஜினி நடித்த, பாபா படத்திற்கு எதிராக, பா.ம.க.,வினர் போராட்டம் நடத்தினர். தியேட்டர்களில் இருந்து, படப் பெட்டிகள் தூக்கிச் செல்லப்பட்டன. இதனால், ரஜினி ரசிகர்கள் மற்றும் பா.ம.க.,வினர் இடையே மோதல் வெடித்தது.

தேர்தல் பிரசாரத்தில், இந்த சம்பவம் குறித்து, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசியது, பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. திருத்தணியில், விஜய காந்த் பேசியதாவது:நான் நடித்த, கஜேந்திரா திரைப்படத்தில் இருந்து, சில காட்சிகளை நீக்கும்படி, பா.ம.க.,வினர் கூறினர். நான் பயந்து விடுவேன் என்று நினைத்தனர். எனக்கு எந்த பயமும் இல்லை. ரஜினியைப் போல நான் யாருக்காகவும் பயந்து பின்வாங்க மாட்டேன். போனால் பணம் தான் போகும்; அதைப் பற்றி எனக்கு கவலையில்லை.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

இது, ரஜினி ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்திற்கு எதிராக, நேற்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.

கடந்த வெள்ளிக்கிழமை [15-04-16] அன்று திருத்தணி தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து திருத்தணி ரயில் நிலையம் அருகே நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

 அப்போது அவர் பேசுகையில், ”எனது கஜேந்திரா திரைப்படத்திலிருந்த காட்சிகளை பாமகவினர் நீக்கச் சொன்னார்கள். ஆனால், விஜயகாந்த் எப்போதும், யாருக்கும் பயப்பட மாட்டான். நல்ல மனதிற்கு மட்டும்தான் பயப்படுவான். நான் நடித்த கஜேந்திரா படத்தில் இடம் பெற்ற தமிழன்…. தமிழன்…. என்கிற பாடலை நிறுத்துமாறு, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார். ஆனால் அதைக்கண்டு பயப்படாமல் வெளியிட்டேன்.

 நான் பயந்துவிடுவேன் என்று நினைத்தார்கள். எனக்கு பயம் இல்லை. பணம்தானே போனால் போகட்டும். ரஜினிகாந்த் மாதிரி நான் யாருக்காகவும் பின்வாங்க மாட்டேன்என்று கூறியிருந்தார்.

இதனால், அதிருப்தி அடைந்த ரஜினி ரசிகர்கள் தமிழகத்தில் பல இடங்களில் விஜயகாந்த்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் காலனியில் ரஜினி ரசிகர்கள் விஜயகாந்தின் உருவ பொம்மையை எரித்து கோஷங்கள் போட்டனர்.

விஜயகாந்த் வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். நன்றி,வணக்கம்.https://youtu.be/hzslnB2bQT8


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: