Posted by: ramrajya | April 25, 2016

லஞ்சம் உண்டுலாபம் உண்டு ஓடு ராஜா..எஸ்.வீ.ரமணி..

லஞ்சம் உண்டுலாபம் உண்டு ஓடு ராஜா..எஸ்.வீ.ரமணி..

 அன்று நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா… நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா…என்ற உணர்ச்சி பொங்கும் பாடலை எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் பாடினார்.

இன்றைய அரசியலில் ஊழல் புரிவோரை மையமாக வைத்து

மாற்றி அமைக்கப்பட்ட இந்தப் பாடல் தினமலர் பத்திரிகையில் வெளிவந்தது. நானும் பாடுகிறேன்,நீங்களும் கேளுங்கள்.. கொஞ்சம் வசன நடையில்தான் இருக்கும் என்னை மன்னித்து விடுங்கள்.நன்றி,வணக்கம்.

 லஞ்சம் உண்டுலாபம் உண்டு ஓடு ராஜா…

சிறை கம்பி உன்னை தேடி வரும்

பாரு ராஜா…

வாங்கி வாங்கி வாழ்ந்தது

போதும் ராஜா…

வட்டிக்கு விட்டும் பிழைக்கலாம்

ஓடு ராஜா…              (லஞ்சம் உண்டு…)

ஊழல் செய்யும் உனக்கு

ஒட்டு துணி எதற்கு

தினம் வாங்கி பழக்கப்பட்ட பின்

வேட்டி எதற்கு?

ஊழலில் திளைத்த பின்பு

பயம் எதற்கு?

நீ கொண்டு வந்ததென்னடா

ஊழல் சரக்கு…        (லஞ்சம் உண்டு…)

அண்ணாந்து பார்க்கிற

நட்சத்திர ஓட்டல் கட்டி

அதன் அருகினில்

டாஸ்மாக் பார்கள் கட்டி

சொர்க்கம் இதுவென்று

பெயரும் வைத்தால்

அந்த சாமி சிலிர்க்கும்

இந்த ஊரே மிதக்கும்        (லஞ்சம் உண்டு…)

ஊழல் இல்லை என்று

சொல்லி ஊளை இடு

இந்தியாவில் லஞ்சம் இல்லா

பூமியேது கவலைவிடு

சிறை கம்பி எண்ண

தோளை நிமிர்த்து

நம்மூரு தலைவரெல்லாம்

தேடி வருவார் மாலை தொடுத்து

லஞ்சம் உண்டு…! https://youtu.be/K3WSP1v-YKs


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: