Posted by: ramrajya | May 3, 2016

நடிகர் சுவாமிநாத்[அபினவ்] கடத்தப்பட்டார்.சென்னை பெருங்குடியில் கால் டாக்ஸி டிரைவர்களின் அராஜகம்.

நடிகர் சுவாமிநாத்[அபினவ்] கடத்தப்பட்டார்.சென்னை பெருங்குடியில் கால் டாக்ஸி டிரைவர்களின் அராஜகம்.

2-5-2016 அன்று மாலை  சுவாமிநாத் என்ற வாலிபர் தன் வேலையின் காரணாமாக,தனது காரில் தனியாக, பெருங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார். பெருங்குடியில் நின்று கொண்டிருக்கும் ஒரு டிராவல் கம்பெனி  காரின் மீது தவறுதலாக மோதிவிட்டார். கால் டாக்சி டிரைவரிடம்,காரின் சேதத்தை தான் ஏற்றுக்கொண்டு சரி பார்த்து செய்து கொடுப்பதாகக்கூறியும். கால் டாக்ஸி டிரைவர் ஏற்றுக்கொள்ளாமல்,மற்ற டிரைவர்களையும் அழைத்து,அந்த வாலிபரை அடித்து தனி இடத்தில் கொண்டு அடைத்து வைத்து விட்டார்கள்.தொலைபேசியையும் பிடிங்கி கொண்டுவிட்டார்கள். தொலைபேசி தொடர்பு துண்டிக்கப் பட்டதால்,சுவாமினாத்தின் பெற்றோர்கள் காவல் துறையிடம் புகார் அளித்தார்கள். இதை அறிந்த காவல் துறை உடனடியாக அங்கு சென்று,சுவாமினாத்தை மீட்டது. காவல்துறையின் உடனடி நடவடிக்கையை நாம் பாராட்டுவதுடன்,பெருங்குடி கால் டாக்ஸி டிரைவர்களின் அராஜகத்திற்கு ஒரு முடிவு கட்டவேண்டும்.

வாலிபருக்கே இந்த நிலை என்றால்,தனியாகச் செல்லும் இளம் பெண்கள்,முதியோர்களை இந்த டிரைவர்கள் என்ன பாடு படுத்துவார்கள்.காவல் துறை பெருங்குடி டிரைவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து மீண்டும் இதைப்போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க ஆவன செய்யவேண்டும். நன்றி,வணக்கம்.

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: