Posted by: ramrajya | May 7, 2016

அதிமுகவின் தித்திக்கும் 2016 தேர்தல் அறிக்கை. எஸ்.வி.ரமணி.

அதிமுகவின் தித்திக்கும் 2016 தேர்தல் அறிக்கை. எஸ்.வி.ரமணி.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக் கையை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அதனை அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை எம்பி உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

  1. கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண் டிய பயிர்க்கடன், நடுத்தரகாலக் கடன் மற்றும் நீண்டகாலக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
  2. நெல்லுக்கான ஆதார விலை உயர்த்தி வழங்கப்படும். கரும்புக் கான மாநில பரிந்துரை விலை உயர்த்தி நிர்ணயம் செய்யப்படும். சர்க்கரை ஆலைகளால் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகைகள் உடனுக் குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  3. மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித் தொகைகள் 5,000 ரூபாயாக உயர்த்தப்படும். மீனவர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம்.
  4. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  5. 11, 12-ம் வகுப்பு மாணவர் களுக்கு மடிக் கணினியுடன், கட்டணமில்லா இணையதள இணைப்பு வசதி வழங்கப்படும்.
  6. ஐந்தாண்டுகளில் 5 புதிய மருத் துவக் கல்லூரிகள் நிறுவப்படும்.
  7. கருவுற்ற தாய்மார்களுக்கு நிதியுதவி 12,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  8. 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும்.
  9. 5 கோடி ரூபாய் செலவில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஃபவுண்டேசன் நிறுவப்படும்
  10. மதம் மாறிய ஆதி திராவிட மற்றும் பழங்குடியினரை, ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும், நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வும் நடவடிக்கை எடுக்கப்படும்.
  11. பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பிற் படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கை பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
  12. பொங்கல் திருநாளுக்கு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இருந்து கைத்தறி துணிகள் வாங்கிக்கொள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 500 ரூபாய்க்கான வெகுமதி கூப்பன் வழங்கப்படும். கைத்தறி நெச வாளர்களுக்கு கட்டணமில்லாமல் வழங்கப்படும் மின்சாரம் 200 யூனிட்களாக உயர்த்தப்படும். விசைத்தறிக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரம் 750 யூனிட்களா

தொடர்ந்து என் தமிழ் உரையைக் கேளுங்கள். நன்றி,வணக்கம். https://youtu.be/AYTpSZCx-Ac


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: