Posted by: ramrajya | May 10, 2016

கருணாநிதிக்கு எதுவும் ஆகவும் வேண்டாம்,அவருக்குப்பின் ஸ்டாலின் முதலவராக ஆகவும் வேண்டாம்.

கருணாநிதிக்கு எதுவும் ஆகவும் வேண்டாம்,அவருக்குப்பின் ஸ்டாலின் முதலவராக ஆகவும் வேண்டாம்.

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் 13-வது முறையாகவும், திருவாரூர் தொகுதியில் இரண்டாவது முறையாகவும் போட்டியிடும் கருணாநிதி, தஞ்சை திலகர் திடலில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியபோது கூறியதாவது:- 

என்னால் நடக்க கூட முடியவில்லை. அப்படி இருந்தாலும் கூட நீங்கள் காட்டுகிற உணர்வு, என் உள்ளத்தில் உள்ள அன்பு, ஆர்வம் இவைகளுக்கு ஈடு இணை கிடையாது. இவைகளையெல்லாம் பொக்கிஷமாக கருதுகிறேன். நாம் அனைவரும் ஒரே குறிக்கோளாடு வாழ வேண்டும். தமிழர்களை காப்பாற்ற, நம்மை விட்டால் யாரும் இல்லை.

வேறு யார் வந்து காப்பாற்றப்போகிறார்கள். நாம்தான் தமிழர்களை காப்பாற்ற வேண்டும். நாம்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும். எனவே எந்த தியாகத்துக்கும் தயாராகுங்கள். நான் உங்களை கேட்டுக்கொள்வது. நாம் எதற்கும் தயார், எதற்கும் ஈடுகொடுப்போம் என்ற சபதத்தை ஏற்று பணியாற்ற வேண்டும்.

என்னைப்பொறுத்தவரை எனக்கு 92 வயதாகிறது. 10 வயது தொடங்கி அரசியலில் பணியாற்றுகிறேன். ஓய்வு இல்லாமல் உழைத்து கொண்டிருக்கிறேன். அந்த ஓய்வை விரும்புகிறேன். நீங்கள் தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த ஓய்வு ஒன்று தான் நான் பட்டபாட்டுக்கு, நான் உழைத்த உழைப்புக்கு, நான் அடைந்த பயன் என்பதை உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்.

நான் பேச முடியாது. தழுதழுத்து பேசுகிறேன். என்னால் சரியாக நடக்கக்கூட முடியாது. தள்ளாடி தள்ளாடி நடக்கிறேன். உங்கள் அன்பால் உதவியால் நான் கடைசி மூச்சைவிட்டுக்கொண்டிருக்கிறேன். நீங்கள் ஆதரிப்பது தனிப்பட்ட கருணாநிதியை அல்ல. கருணாநிதி கொண்டிருக்கும் கொள்கை, உணர்ச்சி, வேகத்தை.

தமிழர்களை காக்க என்னை விட்டால் வேறு கதியில்லை. நாம் தான் நம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். எனவே உங்களை கேட்டுக்கொள்வது தியாகத்துக்கு தயாராக இருங்கள். எதற்கும் நாம் தயார், எதற்கும் ஈடுகொடுப்போம் என்ற சபதத்தை ஏற்று பணியாற்றுவோம்.இவ்வாறு அவர் கூறியிருந்தார்.


மேலும்,  அவர் கூறும்போது முதலமைச்சர் பதவியை மு.க. ஸ்டாலின் விரும்பவில்லை, ஆறாவது முறையாக நான் முதலமைச்சர் ஆகவேண்டும் என்பதை விரும்புபவர்களுள் ஸ்டாலின் மிக முக்கியமானவர். இயற்கையாக எனக்கு ஏதாவது நேர்ந்தால்தான் மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் ஆக முடியும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நம்முடைய கருத்து கருணாநிதிக்கு இயற்கையாகக் எதுவும் ஆகவும் வேண்டாம்,அவருக்குப்பின் ஸ்டாலின் முதலமைச்சராக ஆகவும் வேண்டாம். தமிழகத்தில் எவ்வளவோ ,திறமை உள்ள அரசியலில் ஆர்வம உள்ள இளைஞர்கள்  படித்தவர்கள்,லஞ்சத்தைப் பற்றியே சிந்திக்காதவர்கள்.தமிழுக்காகவும், தமிழ் நாட்டிற்காகவும்,தமிழக மக்களுக்காகவும் உழைக்கக்கூடியவர்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளார்கள். பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விட்டதாக நினைக்குமாம். அதைப்போல் கருணாநிதி வீண் கற்பனையில் மிதக்க வேண்டாம். தமிழகத்தின் வளர்ச்சியில் ஆர்வம மிக்க இளைஞர்கள், தமிழகத்தை உலகின் தலை சிறந்த நாடாக தமிழகத்தை ஆக்கிவிடுவார்கள். நன்றி,வணக்கம்.   https://youtu.be/lwCOIaTed_I


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: